SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னை - கோவா மோதும் அரை இறுதி டிக்கெட் விற்பனை

2020-02-27@ 01:13:00

சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில்  சென்னை-கோவா அணிகள் மோத உள்ள முதல் அரை இறுதி முதல் கட்ட போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்குகிறது. நடப்பு ஐஎஸ்எல் சீசன் லீக் சுற்று முடிவுக்கு வந்த நிலையில், புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்த அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இந்த அரை இறுதி உள்ளூர்/வெளியூர் அடிப்படையில் 2 கட்டமாக நடக்கிறது. சென்னையின் எப்சி - கோவா எப்சி அணிகள் மோதும் அரை இறுதியின் முதல் கட்ட ஆட்டம் சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிப். 29ம் தேதி நடக்கிறது. சென்னை அணி முதல் 10 போட்டிகளில் 2 வெற்றி, 3 டிரா, 5 தோல்வி என்று தள்ளாடிக் கொண்டிருந்தது. பின்னர் புதிய எழுச்சியுடன் விளையாடிய அந்த அணி கடைசி 8 போட்டிகளில் 6 வெற்றி, 2 டிரா என ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் அரை இறுதியை உறுதி செய்துள்ளது.

புதிய பயிற்சியாளர் ஓவன் கோயல் வருகைக்கு பிறகு சென்னை அணி மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்து கோவா அணியும் வலுவான அணியாக தொடர்கிறது. இந்நிலையில், இந்த அணிகள் மோதும் முதல் கட்ட போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்கும் என்ற சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. நேரு விளையாட்டு அரங்கில் டிக்கெட் விற்பனை பிப். 28ம் தேதி 10ம் எண் வாயில் அருகே நடைபெறும். காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை டிக்கெட் விற்பனை நடக்கும். போட்டி நடைபெறும் பிப். 29ம் தேதி 1ம் எண் வாயில் அருகே டிக்கெட் விற்பனை செய்யப்படும். டிக்கெட் விலை ₹250 ரூபாய். புக்மைஷோ செயலி, இணையதளங்கள்  மூலமாகவும் டிக்கெட் வாங்கலாம்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்