SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐசிசி டெஸ்ட் தரவரிசை ஸ்மித் மீண்டும் நம்பர் 1: கோஹ்லிக்கு பின்னடைவு

2020-02-27@ 01:10:55

துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) டெஸ்ட் போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசையில், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் முதலிடத்துக்கு முன்னேறினார். இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அறிமுகமான பின்னர் வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்ரிக்கா, வங்கதேச அணிகளுக்கு எதிராக நடந்த தொடர்களில் அபாரமாக செயல்பட்ட இந்திய அணி 360 புள்ளிகளைக் குவித்து முன்னிலை பெற்றது. நியூசிலாந்து அணியுடன் வெலிங்டனில் நடந்த முதல் டெஸ்டில், 10 விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தாலும் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. எனினும், பேட்டிங் தரவரிசையில் கோஹ்லி பின்னடைவை சந்தித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் ஸ்மித் முதல் இடத்துக்கு முன்னேறிய நிலையில், கோஹ்லி 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார். நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் ரன் குவிக்க முடியாமல் திணறி வரும் அவர், முதல் டெஸ்டில் 2 மற்றும் 19 ரன் மட்டுமே எடுத்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய வீரர்கள் ரகானே 8வது இடத்துக்கும், புஜாரா 9வது இடத்துக்கும் தள்ளப்பட்டனர். வெலிங்டன் டெஸ்டின் முதல் இன்னிங்சில் 34 ரன், 2வது இன்னிங்சில் 58 ரன் எடுத்த தொடக்க வீரர் மயாங்க் அகர்வால் 10வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.
பந்துவீச்சு தரவரிசையில், ஆஸி. வேகம் பேட் கம்மின்ஸ் முதலிடத்தில் நீடிக்கிறார். இந்திய வேகங்கள் ஜஸ்பிரித் பூம்ரா, முகமது ஷமி இருவரும் டாப் 10ல் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆர்.அஷ்வின் 9வது இடத்தில் உள்ளார். ஆல் ரவுண்டர்களுக்கான ரேங்கிங்கில் வெஸ்ட் இண்டீசின் ஜேசன் ஹோல்டர் முன்னிலை வகிக்கிறார். இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 3வது இடத்திலும், ஆர்.அஷ்வின் 5வது இடத்திலும் உள்ளனர்.

அணிகள் டாப் 10

ரேங்க்    அணி    புள்ளி
1    இந்தியா    120
2    ஆஸ்திரேலியா    108
3    இங்கிலாந்து    105
4    நியூசிலாந்து    105
5    தென் ஆப்ரிக்கா    98
6    இலங்கை    91
7    பாகிஸ்தான்    85
8    வெஸ்ட் இண்டீஸ்    81
9    வங்கதேசம்    60
10    ஆப்கானிஸ்தான்    49

பேட்டிங் டாப் 10

ரேங்க்    வீரர்    புள்ளி
1    ஸ்டீவன் ஸ்மித் (ஆஸி.)    911
2    விராத் கோஹ்லி (இந்தியா)    906
3    கேன் வில்லியம்சன் (நியூசி.)    853
4    மார்னஸ் லாபுஷேன் (ஆஸி.)    827
5    பாபர் ஆஸம் (பாகிஸ்தான்)    800
6    டேவிட் வார்னர் (ஆஸி.)    793
7    ஜோ ரூட் (இங்கிலாந்து)    764
8    அஜிங்க்யா ரகானே (இந்தியா)    760
9    செதேஷ்வர் புஜாரா (இந்தியா)    757
10    மயாங்க் அகர்வால் (இந்தியா)    727

பந்துவீச்சு டாப் 10

ரேங்க்    வீரர்    புள்ளி
1    பேட் கம்மின்ஸ் (ஆஸி.)    904
2    நீல் வேக்னர் (நியூசி.)    843
3    ஜேசன் ஹோல்டர் (வெ.இண்டீஸ்)    830
4    காகிசோ ரபாடா (தென் ஆப்.)    802
5    மிட்செல் ஸ்டார்க் (ஆஸி.)    796
6    டிம் சவுத்தீ (நியூசி.)    794
7    ஜேம்ஸ் ஆண்டர்சன் (இங்கிலாந்து)    775
8    ஜோஷ் ஹேசல்வுட் (ஆஸி.)    769
9    ஆர்.அஷ்வின் (இந்தியா)    765
10    கெமார் ரோச் (வெ.இண்டீஸ்)    763

ஆல் ரவுண்டர் டாப் 10

ரேங்க்    வீரர்    புள்ளி
1    ஜேசன் ஹோல்டர் (வெ.இண்டீஸ்)    473
2    பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து)    407
3    ரவீந்திர ஜடேஜா (இந்தியா)    397
4    மிட்செல் ஸ்டார்க் (ஆஸி.)    298
5    ஆர்.அஷ்வின் (இந்தியா)    288
6    கிராண்ட்ஹோம் (நியூசி.)    271
7    பேட் கம்மின்ஸ் (ஆஸி.)    266
8    ரோஸ்டன் சேஸ் (வெ.இண்டீஸ்)    238
9    கிறிஸ் வோக்ஸ் (இங்கிலாந்து)    212
9    டிம் சவுத்தீ (நியூசி.)    212மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai

  கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

 • kurosiya

  கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

 • medition2020

  சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

 • in22222

  கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

 • india2020

  கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்