SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கல்வித்துறையில் ஆட்டம் போடும் பெண் அதிகாரி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2020-02-25@ 00:11:21

‘‘லஞ்ச ஊழல், கல்லா கட்டும் சம்பவங்களில் இப்போது பெண்களும் சளைக்காமல் களத்தில் இறங்கி இருப்பது எதை காட்டுகிறது...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘பொதுவாகவே பெண்கள் மீது வரும் புகார்களை ஒன்றுக்கு இரண்டு முறை போலீசார் உறுதி செய்த பிறகே களத்தில் இறங்குகின்றனர். காரணம், பெண்கள் கைது என்பது சென்சிடிவ்வான விஷயமாகவே எல்லா துறையிலும் பார்க்கிறாங்க... அதை பயன்படுத்தி கோவை மாவட்ட பள்ளிக்கல்வி துறையில் இரண்டெழுத்து பெயர் கொண்ட ஒரு பெண் அதிகாரி ‘செம’ ஆட்டம் போடறாங்களாம். அவர் மீது தொடர்ச்சியாக லஞ்சப்புகார் வெளிவந்த வண்ணம் உள்ளன. பள்ளிகளுக்கு லைசென்ஸ் வழங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல் என பல வகையான ஆய்வுப்பணிகளை இவர் மேற்கொண்டு, சான்றிதழ் வழங்கும்போது சும்மா விடுவதில்லையாம்.. ரொம்பவே கறந்து விடுகிறாராம்... அதனால், இவர் மீது தனியார் பள்ளி உரிமையாளர்கள் சங்கம் கடும் கோபத்தில் இருக்கு. இந்த பெண் அதிகாரியின் வீட்டு வேலைக்கு, ஒரு பள்ளி மாணவியை பணியமர்த்தியுள்ளார். இந்த விவகாரம் வெளியே தெரிந்தவுடன், அந்த மாணவியை காளப்பட்டியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் சப்தம் இல்லாமல் பத்தாம் வகுப்பில் சேர்த்து விட்டுள்ளார். இந்த பெண் அதிகாரியின் வசூல் வேட்டை ஒருபுறம் இருக்க, மற்றொருபுறம் நடன பயிற்சி என்ற பெயரில், இரண்டெழுத்து பெயர் கொண்ட ஒரு ஆண் நண்பருடன் சுற்றி வருகிறார். இவர்கள் இருவரும் அடிக்கடி, பல வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர். சமீபத்தில்கூட இந்த பெண் அதிகாரியின் ‘ஹேப்பி பர்த் டே' கேரள மாநிலம் ஆலப்புழா போர்ட் ஹவுசில் நடந்துள்ளது. இவ்விழாவுக்கு இரண்டெழுத்து ஆண் நண்பர் மற்றும் சில மாணவிகளையும் அழைத்துச்சென்றுள்ளார். இந்த தகவல், கல்வித்துறையில் காட்டுத்தீயாக பரவியுள்ளது... இது ஆசிரியர்கள் மட்டுமில்லாமல் பெற்றோர் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்காம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பூங்காவில் இயற்கை காற்றை வாங்கிக் கொண்டு டாஸ்மாக் கணக்குகளை சரிபார்க்கும் அதிகாரி பற்றி சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘காஞ்சிபுரத்தை சேர்ந்த டாஸ்மாக் உயர் அதிகாரி ஒருவர் மாவட்டம் விட்டு மாவட்டம் ஆய்வுக்கு செல்லும் போது முறையாக பணி செய்வதில்லை. கடைகளில் ஆய்வுக்கு நேரடியாக செல்லாமல் ஏதாவது ஒரு பூங்காவில் அமர்ந்துகொள்வாராம். பின்னர், தனக்கு நெருங்கிய சூபர்வைசர்களையும், உதவியாளர்களையும் மட்டுமே ஆய்வுக்கு அனுப்புகிறாராம். அந்த சூபர்வைசர்கள் தரும் ஆய்வு அறிக்கைகளையே மாதம்தோறும் நடைபெறும் மாதாந்திர ஆய்வு கூட்டத்தில் சமர்ப்பித்து வருகிறாராம். அவர் மீது புகார்கள் தெரிவிக்க ஊழியர்களும் அச்சப்படுகின்றனர். ஏனென்றால், புகார் தெரிவித்தது வெளியே தெரிந்தால் பழிவாங்கும் நடவடிக்கைக்கு ஆளாவோமோ என்று பயப்படுகிறார்களாம். டாஸ்மாக்கில் லஞ்சம் ஒருபுறம் கரைபுரண்டோட, மறுபுறம் இதுபோன்று அதிகாரிகள் பணியை சரியாக செய்யாமல் பூங்காவே கதி என்று கிடப்பதாக ஊழியர்கள் வருத்தம் தெரிவித்து வருகிறார்கள்....’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மலைக்கோட்டை மாவட்டத்தில் இலை ஆடுதாமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘தமிழகம் முழுவதும் கடந்த வாரம் 14 ஆவின் கலைக்கப்பட்டு சேர்மன் பதவிகள் பறிக்கப்பட்டது. குறிப்பாக திருச்சி ஆவினும் கலைக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. இபிஎஸ்க்கு நெருக்கமானவர் எனக் கூறிக்கொண்டிருந்த திருச்சி ஆவின் சேர்மன் பதவியும் ஒரு ஆண்டுகாலம் நிறைவடையும் முன்பே பறிக்கப்பட்டதால் அவருடைய ஆதரவாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனராம். கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் ஆவின் கூட்டுறவு சங்க நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடத்தப்பட்டு புதிய சேர்மன்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்த வகையில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களை உள்ளடக்கிய மலைக்கோட்டை மாநகரில் ஆவின் சேர்மன் பதவி வகித்து வந்த மாஜி கவுன்சிலர், இலை பெண் அமைச்சருடன் சேர்ந்து தனி அணியாக செயல்பட தொடங்கினாராம். கடந்த வாரம் ஓபிஎஸ்- இபிஎஸ் முன்னிலையில் நடந்த ஆலோசனை கூட்டத்தின் போது மலைக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள், திருச்சி ஆவின் சேர்மன் பதவி வகித்து வந்தவர் மீது பல்வேறு புகார்களையும், குற்றச்சாட்டுகளையும் அடுக்கினார்களாம். குறிப்பாக இபிஎஸ் பெயரை பயன்படுத்தி கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக ஆலோசனை கூட்டத்தில் முக்கிய குற்றச்சாட்டாக தெவிக்கப்பட்டதாம்... இதனால் கோபத்தின் உச்சத்தில் சென்ற இபிஎஸ், திருச்சி ஆவின் சேர்மன் பதவி வகித்து வந்தவரை சென்னைக்கு வரவழைத்து செம டோஸ் விட்டு எச்சரித்து அனுப்பினாராம். இபிஎஸ் பெயரை தவறாக பயன்படுத்தியதுதான் திருச்சி ஆவின் சேர்மன் பதவிப் பறிப்புக்கு முக்கிய காரணம் என அதிமுகவினர் மத்தியில் பரவலாக பேசிக்கிறாங்க...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘சிறைத் துறையில என்ன மேட்டர் இருக்கு...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘வேலூர் சரக சிறைத்துறை டிஐஜியாக பணியாற்றி வருபவர் ஜெயமான பாரதி. இவருக்கும் வேலூர் சிறை பெண் கண்காணிப்பாளருக்கும் ஏழாம் பொருத்தமாக உள்ளதாம். உயரதிகாரி செல்போனில் தொடர்பு கொண்டால் கூட கண்காணிப்பாளர் போனை எடுப்பதில்லையாம். இருவருக்கும் இடையே பனிப்போர் நடப்பது வெளியே தெரியாமல் பார்த்து வந்தார்களாம். இதற்கிடையில், காலியாக உள்ள கோவை சரக சிறைத்துறை டிஐஜி பணியிட மாறுதல் கேட்டு ஜெயமானவர் முயற்சி செய்தாராம். அதோடு இல்லாமல் ‘ப’ வைட்டமின் தர தயாராக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில், சிறையில் நடந்த ஊழல்கள் குறித்து சென்னை தலைமையக டிஐஜி கனகமானவர் வெளியிட்ட அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஊழல் புகாரில் சிக்கியவர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அறிக்கை வெளியிட்ட கனகமானவர் திருச்சிக்கு மாற்றப்பட்டார். அங்கு பணியாற்றிய சண்முகசுந்தரம் கோவை சரக டிஐஜியாக மாற்றப்பட்டார். இதனால் கோவை சரக டிஐஜியாக பணியிட மாற்றம் கேட்டு எதிர்பார்த்து காத்திருந்த ஜெயமானவருக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியதாம். இதனால் ஜெயமானவர் தனக்கு தெரிந்த அதிகாரிகள் மூலம் கோவை சரக டிஐஜியாக பணியிட மாற்றம் செய்வதற்கு முயற்சியில் இறங்கி உள்ளாராம்...’’ என்றார் விக்கியானந்தா


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai

  கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

 • kurosiya

  கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

 • medition2020

  சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

 • in22222

  கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

 • india2020

  கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்