SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவு இன்று புதிய உயரத்தை எட்டியது. இவ்வுறவு நீண்ட காலம் நீடிக்க வேண்டும் : நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை

2020-02-24@ 14:31:16

அகமதாபாத்: அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் மைதானம் சென்ற அதிபர் டிரம்ப்பிறகு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அத்துடன் மொதேரா மைதானத்தின் நுழைவு வாயிலில் அதிபர் ட்ரம்பிற்கு ஒட்டகங்கப் படை வரவேற்பும்  அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சர்தார் வல்லபாய் பட்டேல் மைதானத்தில் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி தொடங்கியது. அரங்க மேடையில் அமெரிக்க அதிபரும் பிரதமர் மோடியும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.இருநாட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது நிகழ்ச்சி தொடங்கியது. பின்னர் தனது உரையை தொடங்கும் முன் நமஸ்தே டிரம்ப், டிரம்ப் நீடுழி வாழ்க என முழக்கமிட்டார் பிரதமர் மோடி.பிரதமர் மோடியை தொடர்ந்து அரங்கில் கூடியுள்ள மக்களும் நமஸ்தே டிரம்ப், டிரம்ப் நீடுழி வாழ்க என முழக்கமிட்டனர்.

நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது,

*உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டிற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப்,  அவரது மனைவி மற்றும் மகளை  மனதார வரவேற்கிறேன். அமெரிக்க அதிபரின் பயணம் வரலாற்று சிறப்புமிக்கது. இந்திய, அமெரிக்க உறவு சாதாரண உறவல்ல, ஆழமான நட்புறவு கொண்டுள்ளது.

*அதிபர் டிரம்பின் வருகை ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். எனக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கும் நண்பர் அதிபர் டிரம்ப்.

*களைப்பு இல்லாமல் இந்தியர்களை சந்திக்க வந்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

*அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் அவரது குடும்பத்தினரும் சபர்மதி ஆசிரமத்தில் மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தினர்.

*அமெரிக்காவின் ஹூஸ்டனில் நடைபெற்ற ஹவ் டி மோடி நிகழ்ச்சியில் இருந்து அதிபர் டிரம்ப் உடனான எனது பயணம் தொடங்கியது.

*இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவு மற்ற நாடுகளுக்கு இடையிலான உறவு போன்றதல்ல.

*இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவு இன்று புதிய உயரத்தை எட்டியுள்ளது.இருநாடுகள் இடையேயான உறவு நீண்ட காலம் நீடிக்க வேண்டும்.

*இந்தியாவின் பன்முக கலாச்சாரத்தை எடுத்து காட்டுவதாக அகமதாபாத் உள்ளது.நாட்டின் சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய இடம் அகமதாபாத்.

*சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் 'புதிய வரலாறு' படைக்கப்படுகிறது

*அமெரிக்காவின் சுதந்திர தேவியின் சிலை இன்று இந்தியாவின் ஒற்றுமையின் சிலையைச் சந்திக்கிறது.

*இந்திய - அமெரிக்கா உறவில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் வருகை ஒரு மைல் கல் ஆகும்.

*மெலானியா டிரம்ப் இந்தியாவுக்கு வந்திருப்பது பெருமை தரும் அம்சமாகும்.குழந்தைகள் நல்வாழ்வுக்காக மெலானியா டிரம்ப் ஆற்றுயுள்ள சேவை மகத்தானது.  

 இந்திய மண்ணில் கால் பதித்த ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மனைவி மெலானியா ட்ரம்புடன் இந்தியா வந்தடைந்தார். அகமதாபாத் விமானநிலையத்தில் பிரதமர் மோடி அதிபர் ட்ரம்பை ஆரத்தழுவி வரவேற்றார்.அதன் பின்னர் டிரம்ப் இணையருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியுடன் இணைந்து சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்த அமெரிக்க அதிபர், இரு புறமும் அரங்கேறிய பாரம்பரிய நடனங்களை பார்வையிட்டார்.பின்னர் அங்கு தயாராக நின்றிருந்த பீஸ்ட் காரில் ஏறி அமெரிக்க அதிபரும், அவரது மனைவியும் சபர்மதி ஆசிரமம் நோக்கி புறப்பட்டனர். செல்லும் வழி எங்கும் அவர்களுக்கு ஒவ்வொரு மாநிலத்தின் பாரம்பரியத்தை விளக்கும் வகையிலான கலை நிகழ்ச்சிகள் மூலம் வரவேற்பு அளிக்கப்பட்டது. சபர்மதி ஆசிரமத்தை வந்தடைந்த ட்ரம்ப் தம்பதிக்கு, அவர்களுக்கு முன்னதாகவே அங்கு வந்திருந்த பிரதமர் மோடி கைத்தறி துண்டு அணிவித்து வரவேற்றார்.தொடர்ந்து ஆசிரமத்திலுள்ள நூல் நூற்கும் ராட்டை குறித்து பிரதமர் மோடி, ட்ரம்ப் தம்பதியினருக்கு விளக்கி கூறினார். அவரை தொடர்ந்து ஆசிரம நிர்வாகிகள் ராட்டையை இயக்குவது குறித்து எடுத்துக் கூற, அமெரிக்க அதிபர் மனைவி மெலானியாவுடன் இணைந்து ராட்டையை இயக்கினார்.சபர்மதி ஆசிரம நிகழ்வுகளை முடித்துக் கொண்டு, உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மொடேராவுக்கு அமெரிக்க அதிபரும், அவரது மனைவியும் புறப்பட்டு சென்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai

  கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

 • kurosiya

  கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

 • medition2020

  சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

 • in22222

  கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

 • india2020

  கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்