SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆப்கானிஸ்தானில் 5 ஆண்டுகளுக்கு பின் தலிபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் செல்போன் சேவை மீண்டும் தொடக்கம்

2020-02-24@ 10:49:44

காபூல்: ஆப்கானிஸ்தானில் போர் நிறுத்தம் செயல்பாட்டிற்கு வந்துள்ள நிலையில், தலிபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் செல்போன் உள்ளிட்ட தொலைதொடர்பு சேவைகள் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.

தலிபான் பயங்கரவாதிகள் அட்டூழியம்

அமெரிக்காவில் தீவிரவாத தாக்குதல் நடத்திய அல்-கய்தா தலைவர் ஒசாமா பின்லேடனையும், அவர்களுக்கு ஆதரவளித்த தலிபான்களையும் ஒடுக்க அமெரிக்கப்படை ஆப்கானிஸ்தானில் கடந்த 2001ல் இறங்கியது. அதே சமயம் ஆப்கானிஸ்தான் நாட்டில் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான் பயங்கரவாத அமைப்பு தங்கள் ஆளுமைக்கு கட்டுப்படாத மக்களை ஈவு இரக்கமின்றி கொன்று வருகிறது. பொதுமக்களை குறிவைத்தும் அவ்வப்போது தற்கொலைப்படை தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றன. இந்த தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்து வருகின்றனர்.

 தொலைதொடர்பு  சேவைகள் இல்லாமல் மக்கள் தவிப்பு

மேலும், தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அரசு மற்றும் தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களால் அமைக்கப்பட்டுள்ள செல்போன் கோபுரங்களை சேதப்படுத்தியும், அங்கு பணிபுரியும் நபர்களை கடத்தி கொலை செய்தும் அட்டூழியத்தில் ஈடுபட்டுவந்தனர். இதனால் அந்நாட்டின் பல பகுதிகளில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள்  செல்போன் உள்ளிட்ட தொலைதொடர்பு சாதனங்களை பயன்படுத்த முடியாமல் தவித்துவந்தனர். 2001 முதல் நடைபெற்றுவரும் இந்த உள்நாட்டு போரில் தலிபான் பயங்கரவாத குழுக்களை ஒழிக்க ஆப்கானிஸ்தான் அரசு படையினரும், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டுப்படையினரும் தரைவழி மற்றும் வான்வெளி தாக்குதல்களை நடத்திவருகின்றனர்

மீண்டும் செல்போன் சேவை

இந்நிலையில் தலிபான்கள், அமெரிக்க மற்றும் ஆப்கன் படைகளுக்கு இடையே ஒரு வாரம் காலம் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கிராம பகுதிகளில் ஒரு சில இடங்களில் மட்டும் வன்முறை அரங்கேறியுள்ளது. மிகப்பெரிய தாக்குதல் எதுவும் நடைபெறாத நிலையில், வன்முறை குறைந்துள்ளதை காண முடிவதாக உள்துறை அமைச்சர் மசூத் தெரிவித்துள்ளார். இதையடுத்து சுமார் 730 செல்போன் கோபுரங்கள் 5 ஆண்டுகளுக்கு பிறகு செயல்பாட்டிற்கு வந்துள்ளன. நாடு முழுவதும் செல்போன் சேவை கிடைப்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்