SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கற்றது கை மண் அளவு, கல்லாதது உலக அளவு’ மன் கி பாத் நிகழ்ச்சியில் ஔவையார் வரிகளை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி பேச்சு

2020-02-23@ 14:09:45

டெல்லி: கற்றது கை மண் அளவு, கல்லாதது உலக அளவு’  மன் கி பாத் நிகழ்ச்சியில் ஔவையார் வரிகளை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி பேசினார். நமது இளைஞர்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஆர்வம் செலுத்தி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்றும் 'மன் கி பாத்' நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்கள் இடையே பிரதமர் மோடி உரையாற்றுவார். நமது வேற்றுமையில் ஒற்றுமை என்பது, ஒட்டுமொத்த மனித இனத்திற்கே, மதிப்புமிக்க பொக்கிஷமாக விளங்குகிறது என பிரதமர் மோடி பேசினார். இதனை நாம் பாதுகாத்து ஆராய வேண்டும். அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்து நமது இளைஞர்கள் ஆர்வத்துடன் பேசி வருகின்றனர். சந்திரயான்-2 விண்கலம் ஏவப்பட்ட நிகழ்ச்சியை பார்க்க இஸ்ரோ சென்ற போது, குழந்தைகளின் உற்சாகத்தை காண முடிந்தது. நமது இளைஞர்கள் மத்தியில், அறிவியல் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் வகையில், புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என கூறினார். ராக்கெட் ஏவப்படுவதை, ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து நீங்கள் நேரடியாக பார்க்கலாம் என கூறினார். இதற்காக 10 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது என பேசினார். இந்தியாவில் பல்லுயிரியல் என்பது மதிப்பு மிக்க பொக்கிஷம்; அதை நாம் பாதுகாக்க வேண்டும் என கூறினார்.

கேரளாவின் கொல்லத்தில் வசித்து வரும் பகீரதி என்ற பெண், 10 வயதாகும் போது பள்ளிப்படிப்பை பாதியில் விட்டார். தற்போது 105 வயதில், தனது படிப்பை மீண்டும் துவங்கியதுடன், 4ம் நிலை தேர்வில் 75 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார். அனைவருக்கும் முன்மாதிரியாக உள்ள அவருக்கு நான் எனது மரியாதையை செலுத்துகிறேன். புலம்பெயர்ந்த உயிரினங்களுக்கான நிலையான வாழ்விடங்களை அமைக்க இந்தியா முயற்சி செய்கிறது என கூறினார். இதற்காக மேகாலயாவில், தனித்துவமான இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏன் 32 ரக விமானம், லே மாவட்டத்தில் குஷோக் பகுலா ரிம்போக்கி விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய போதுவரலாறு படைக்கப்பட்டது. இந்த போர் விமானத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 10 சதவீத உயிரி எரிபொருள் பயன்படுத்தப்பட்டது. பழைய அணுகுமுறைகளை இன்னும் பின்பற்ற நமது புதிய இந்தியா விரும்பவில்லை. புதிய இந்தியாவில் நமது சகோதரிகளும், தாய்மார்களும் முன்னேறி செல்வதுடன், சவால்களை தங்களது கைகளில் எடுத்து கொள்கின்றனர் என மோடி பேசினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • siva5

  1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

 • death5

  கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்!!!

 • coronaa5

  புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்

 • locust4

  ராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு!: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை!!!

 • ingland4

  இங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்