SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சோகத்தில் மூழ்கிய சேலம் அரசு வக்கீல் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2020-02-23@ 01:34:11

‘‘மாங்கனி மாவட்டத்துல என்ன நடக்குது...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘அரசு வக்கீல் பதவி போச்சே என்று ஒருவர் சோகத்தில் இருப்பதுதான் சேலத்தில் ஒரே பேச்சாக இருக்கிறது...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மாங்கனி மாநகராட்சி தொடர்பான சட்ட பிரச்னை விவகாரங்களை கவனிக்க தனியாக அரசு வக்கீல் இருக்காராம். மாநகராட்சிக்கு எதிராக பல்வேறு தரப்பில் இருந்தும் நீதிமன்றத்தில் தொடரப்படுகின்ற வழக்குகளுக்கு அவர் பதிலளித்து வருவதையும், வழக்கின் நிலையை அதிகாரிகளுக்கு எடுத்துரைப்பதையும் செய்து வந்தார். சமீபகாலமாக மாநகராட்சி வழக்குகளில் அதிக அக்கறை  காட்டாமல், பைல் அனைத்தையும் தன்னுடைய மேசை மீது போட்டு வைத்திருந்தாராம். அதிகாரிகள் கேட்கும் கேள்விக்கும் சரிவர பதிலும் கொடுக்காமல், இருந்துள்ளார். இந்த விஷயத்தை மாங்கனி நகருக்கு தமிழக விவிஐபி வந்தபோது, அவரது காதில் அதிகாரிகள் போட்டு விட்டாங்களாம்.

உடனே அடுத்த அதிரடியாக அந்த அரசு வக்கீலை டம்மி ஆக்கிவிட்டு, சில முக்கிய மாநகராட்சி தொடர்பான வழக்குகளை கவனிக்க வேறு அரசு வக்கீலை நியமிச்சிருக்காங்களாம். இதனால தற்போது, உள்ளதும் போச்சேனு சோகத்தில் இருக்காராம் அந்த அரசு வக்கீல்...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கலெக்டர் ஆபீஸ் கேட் மூடியே கிடக்காமே...’’ என்றார் பீட்டர் மாமா. ‘மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு 4 வாசல்கள் இருக்கு... இதுல 2 வாசலை மக்களவை தேர்தலை காரணமா சொல்லி மூடினாங்க.... ஓராண்டில் 3 கலெக்டர்கள் மாறி, இப்ப 4வது கலெக்டரும் பொறுப்பேத்துட்டாரு... ஆனாலும், அந்த 2 வாசல் இப்ப வரைக்கும் மூடியே கிடக்குதாம்... காரணம் கேட்டா, தேர்தல் விதிமுறைகளை கடைப்பிடிக்க மூடினோம்னு சொல்றாங்க.... இன்னும் ஏன் திறக்கவில்லைன்னு கேட்டா, ‘போராட்டங்கள், தீக்குளிப்பு முயற்சிகள் அடிக்கடி நடக்குது. அதை கட்டுப்படுத்தி,

சோதனை நடத்த முடியாமல் திணறும் போலீசார் 2 வாசலை மூட பரிந்துரைச்சாங்களாம்... ஆனாலும் தீக்குளிப்பு முயற்சிகளை தடுக்க முடியாமல் கெரசின் கேனுடன் புகுந்து விடுகிறார்களாம்... ஏற்கனவே இலை கட்சி எம்எல்ஏ ஒருவர், கலெக்டர் அலுவலக கட்டிட மாடிக்கு ஏற முடியவில்லை என்று சொன்னதால, பல லட்சம் செலவில் லிப்ட் வசதி ஏற்படுத்தினாங்க.... அவர் இறந்த பின்பு யாருக்கும் பயன்படாம லிப்ட் மூடியே கிடக்குதாம். இப்படி பொதுமக்கள் அன்றாடம் வந்து செல்லும் கலெக்டர் அலுவலகத்துல, வாசல்களை, லிப்டை மூடி வச்சு, சோதனைங்கிற பேர்ல மனு கொடுக்க வர்றவங்களை போலீஸ் பாடாய்படுத்துதாம்... அதுமட்டுமில்லை... கலெக்டர் ஆபீஸ் முன்னாடி போராட்டம் நடந்தால், இருக்கிற 2 கேட்டையும் மூடி வச்சிருதாம் போலீஸ்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பினாமி பெயரில் மாநகராட்சி கடைகளை நடத்தும் அரசியல் கட்சி பிரமுகர்கள் பற்றி சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘வேலூர், காட்பாடி ஆகிய பகுதிகள் வணிகத்துக்கு ஏற்ற இடமாக இருக்கிறது. இதனால், காட்பாடி சித்தூர் பஸ்நிலையம், வேலூர் புதிய பஸ்நிலையம் உட்பட மாநகராட்சி பகுதிகளில் அமைந்துள்ள மாநகராட்சி கடைகளை உரிய வாடகைக்கு விடாமல் அரசியல் பிரமுகர்கள் சிலர் முட்டுக்கட்டை போட்டுவிடுகிறார்களாம். தொடர்ந்து பெரும்பாலான மாநகராட்சி கடைகளை பினாமிகள் பெயரில் அரசியல்வாதிகளே நடத்தி வருகின்றனர். மேலும் அதிகாரம் கையில் இருப்பதால், மாநகராட்சி கடைகளுக்கான வாடகை மற்றும் வரியையும் செலுத்தாமல் இழுபறி செய்கின்றனர். இதனால், மாநகராட்சி நிர்வாகத்துக்கு பல லட்சம் வருமானம் இழப்பு.

இந்நிலையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வேலூர் புதிய பஸ்நிலையம் நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட உள்ளது. இதற்காக, பஸ்நிலையத்தில் உள்ள கடைகள், பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்நிலையத்தில் 700 சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் வணிக வளாக கட்டிடம் அமைக்கப்படுகிறது. இந்த வணிக வளாகத்தில் உள்ள கடைகளையும் பினாமிகள் பெயரில் வாடகைக்கு எடுப்பதற்காக, அரசியல் பிரமுகர்கள் இப்போதே அடித்தளம் போட தொடங்கிவிட்டார்களாம். இதனால், ஸ்மார்ட் சிட்டியிலும் மாநகராட்சிக்கு வருமானம் பாதிக்கும் என்று அதிகாரிகள் புலம்பி வருகின்றனர்...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘சிஇஓவை மிரட்டினாராமே எம்எல்ஏ...’’ ‘‘பெரம்பலூர் மாவட்டத்தில் சாரண, சாரணியருக்கான புதிய கட்டிட திறப்பு விழா மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் நடந்தது.

பெரம்பலூர் மற்றும் வேப்பந்தட்டை கல்வி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார். விழாவிற்கான அழைப்பிதழில் பெரம்பலூர் எம்எல்ஏ பெயர் மட்டும் இடம் பெற்றிருந்தது. விழா ஆரம்பித்து நடந்து கொண்டிருந்த போது, சிஇஓவிற்கு செல்போனில் அழைப்பு வந்தது. போன் பேசி முடித்ததும் சிஇஓவிற்கு முகம் வேர்த்து கொட்டியது. அதை தொடர்ந்து சிறிது நேரத்தில் அங்கு வந்த குன்னம் தொகுதி எம்எல்ஏ ஆதரவாளர்கள், எங்கள் எம்எல்ஏ பெயரை ஏன் போடவில்லை என சிஇஓவிடம் ஒருமையில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் விழா மேடையில் சலசலப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து சிஇஓவிற்கு மீண்டும் ஒரு போன் கால் வந்தது. அதில் பேசிய எல்ஏ, என் பெயரை ஏன் போடவில்லை, அரசியல் செய்கிறாயா என கேட்டு மிரட்டி, பொரிந்து தள்ளிவிட்டார்.

இதையறிந்த பெரம்பலூர் எம்எல்ஏ மற்றும் கல்வி நிறுவன தாளாளர் ஒருவர் விழாவில் இருந்து கிளம்பி சென்றனர். செல்லும் போது பிரச்னை வேண்டாம், வேறு ஒருநாளில் இரு எம்எல்ஏவையும் அழைத்து விழா நடத்தலாம், தற்போது கலை நிகழ்ச்சியுடன் விழாவை முடித்து கொள்ளுங்கள் என கூறி சென்றனர்...’’ என்றார் விக்கியானந்தா


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai

  கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

 • kurosiya

  கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

 • medition2020

  சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

 • in22222

  கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

 • india2020

  கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்