SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இருக்கு... ஆனா...?

2020-02-23@ 00:55:25

மத்திய அரசு ரூ500, ரூ1000 நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்த போது புதியதாக தோன்றியது தான் ரூ2000 ேநாட்டு. இந்த நோட்டுகள் தான் வங்கிகளிலும், ஏடிஎம்மிலும் சரளமாக வந்தது. யார் கையில் பார்த்தாலும் கத்து கத்தாக ₹2000 நோட்டு. பெட்டிக்கடையில் குளிர்பானம் வாங்கினாலும், டீ கடையில் தேநீர், வடை வாங்கி சாப்பிட்டாலும் வாடிக்கையாளர்கள் அனைவரும் ரூ2000 நோட்டுகளை நீட்டினார்கள். சில்லரை தர முடியாமல் கடைக்காரர்கள் திணறிப்போனார்கள். சிலர் ரூ2000 நோட்டை காண்பித்து சில்லரை இல்லையா என்று ேகட்டுக்கொண்டே மாதக்கணக்கில் தேநீர் கடையில் காசு கொடுக்காமல் டீ சாப்பிட்ட சம்பவங்களும் அரங்கேறின.

பஸ்சில் ஏறினால் பயணிகளுக்கும், நடத்துனருக்கும் இடையே வாக்குவாதம். காரணம் ரூ2000க்கு சில்லரை இல்ைல. ரூ12 டிக்கெட்டுக்கு ரூ2000 நோட்டை நீட்டினா எப்படி என்று நடத்துனர்கள் கோபப்பட்டது வாடிக்கையானது. தமிழகத்தில் அதிலும் குறிப்பாக சென்னை போன்ற நகரங்களில் வெளியூர்களில் இருந்து வந்து தங்கி வேலை பார்ப்பவர்கள் அதிகம். அவர்கள் குறைந்தபட்ச மதிப்புள்ள நோட்டுகளை தான் பரிவர்த்தனைக்கு பயன்படுத்துகிறார்கள். எனவே ஏடிஎம்களில் ரூ2 ஆயிரம் நோட்டை வைக்காமல் நிறுத்திக்கொள்வது என்று வங்கிகள் முடிவு செய்துள்ளன. சில்லரை தட்டுப்பாடு ஒரு பக்கம் இருந்தால் கறுப்பு பணமாக பதுக்குவதற்கும் ரூ2000 நோட்டு சுலபமாக இருக்கிறது என்பதும் ஒரு காரணம்.

எனவே இனி ஏடிஎம்களில் ரூ500, ரூ200, ரூ100 நோட்டுகள் தான் அதிகம் கிடைக்கும். அதே சமயம் வாடிக்கையாளர்கள் தங்கள் கையில் உள்ள ரூ2000 நோட்டை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி வெளியே புழக்கத்தில் உள்ள ரூ2000 நோட்டுகளை முழுமையாக வங்கிகள் சேமித்த பிறகு அவற்றை புழக்கத்தில் இருந்து படிப்படியாக நிறுத்திக்கொள்ள இருக்கிறது. அதே நேரம் மக்களின் சிரமத்தை போக்க ரூ1000 நோட்டை மீண்டும் அச்சிட்டு புழக்கத்தில் கொண்டு வரும் ஆலோசனையும் இருப்பதாக தெரியவருகிறது.

எது எப்படியோ, இனி ரூ2000 நோட்டை வைத்துக்கொண்டு சில்லரை கேட்டு அலையும் பிரச்னையில் இருந்து பெரும்பாலான மக்கள் தப்பித்துவிட்டார்கள். இனி குறைந்த மதிப்பு ரூபாய் நோட்டுகள் அனைவரது கைகளிலும் தாராளமாக புழங்கும். சில்லரை கிடைக்காது என்ற பயமில்லாமல் பெட்டிக்கடைகள், ஓட்டல்கள், பஸ் பயணம் என்று தாராளமாக மக்கள் செலவு செய்யலாம்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai

  கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

 • kurosiya

  கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

 • medition2020

  சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

 • in22222

  கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

 • india2020

  கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்