SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதிய வடிவமைப்பில் ஹோண்டா ஷைன்

2020-02-23@ 00:10:22

சென்னை: ஹோண்டா நிறுவனம்,  125 சிசி மோட்டார் பைக்கை புதிய மேம்படுத்தப்பட்ட வாகனத்தை ஷைன் என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.  அடுத்த தலைமுறை வாகனம் ஷைன் விலை ரூ67, 857.  புதிய அம்சங்கள் நிறைந்த ஹோண்டா ஷைன் பிஎஸ் -6 வாகனம் இப்போது 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் மற்றும் 14 சதவீத கூடுதல் மைலேஜ் அம்சங்களுடன் வருகிறது. இதில் பொருத்தப்பட்ட 125 சிசி இன்ஜின், ஈஎஸ்பி (மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட் பவர்) மூலம் இயக்கப்படுகிறது மேலும், பி.எஸ்.-6  ஷைன் வாகனம், புதிய தொழில்நுட்பத்துடன் 14 சதவீதம் அதிக மைலேஜ் தருகிறது. புதிய 5-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் மென்மையான மற்றும் திறன் வாய்ந்த சவாரியை வழங்குகிறது. புதிய டிசி ஹெட்லேம்ப் வசதியானது, மெதுவான வேகத்தில் செல்லும்போதும் மற்றும் இரவு சவாரிக்கும் நீடித்த வெளிச்சத்தை வழங்குகிறது.

புதிய இஞ்சின் ஸ்டார்ட் செய்ய, நிறுத்த ஒற்றை சுவிட்ச்; புதிய ஒருங்கிணைந்த ஹெட்லேம்ப் பீம் & பாஸிங் சுவிட்ச்  ஆகிய இரு செயல்பாடுகளையும் கட்டுப்படுத்த ஒற்றை சுவிட்ச் வசதி உண்டு. சிறப்பு 6 ஆண்டு உத்தரவாத தொகுப்பு: ஷைன் பி.எஸ்.-6 வாகனங்கள், டிரம் & டிஸ்க் என இரண்டு வகைகளில் கிடைக்கும், நிறுவனத்தின் தலைவர், தலைமைச் செயல் அதிகாரி மற்றும் மேலாண்மை இயக்குனர் மினோரு கடோ, “அடுத்த சகாப்தத்துக்கான மாற்றத்தை முன்னெடுத்துச் செல்லும் ஹோண்டா, ஏற்கனவே 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை அதன் மேம்பட்ட பி.எஸ்.-6 மாடல்கள். மூலம் மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது. மேலும் இந்தியாவில் எங்கள் வணிக விரிவாக்கத்தை மேலும் பலப்படுத்தும்.' என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்