SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னையில் போலீசாரின் தடையை மீறி 'பஸ்டே' கொண்டாடிய பள்ளி மாணவர்கள்

2020-02-22@ 10:21:47

சென்னை:  சென்னையில் போலீசாரின் தடையை மீறி பள்ளி மாணவர்கள் 'பேருந்துநாள்' கொண்டாடியதுடன்,  பேருந்து மேற்கூரையில் ஏறி ஆட்டம்போட்டது அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னையில் பேருந்து நாள் கொண்டாடிய கல்லூரி மாணவர்கள் பயணிகளையும், பொதுமக்களையும் துன்பத்திற்கு ஆளாக்கும் நிலை அதிகரித்து வந்ததால் அதற்கு தடை விதிக்கப்பட்டது. இருந்தாலும் 'ரூட்டுதல'  என்ற பெயரில் அவ்வப்போது பஸ்டே கொண்டாடுகின்றனர். போலீசாரின் எச்சரிக்கையையும்,  அறிவுறுத்தலையும் மீறி சாகசம் செய்ய நினைத்து சங்கடத்தில் சிக்கிக் கொண்ட மாணவர்களும் உண்டு. இந்த நிலையில் அரசுப் பள்ளி மாணவர்களும் தடையை மீறி பேருந்து தினம் கொண்டாடி உள்ளனர்.

தாம்பரத்தில் இருந்து குன்றத்தூருக்கு செல்லும் பேருந்தில் சேக்கிழார் பள்ளி மாணவர்கள் சிலர் பஸ்டே என்பதை தெரிவிக்கும் வகையில் ஃபிளக்ஸ் பேனரை கட்டி, பேருந்தின் மேற்கூரை மீது நின்று ஆட்டம் போட்டனர். மாணவப் பருவம் என்பது மீண்டும் கிடைக்காத வரப்பிரசாதம். ஆட்டம், பாட்டம் என நண்பர்களுடன் உற்சாகமாக இருந்தாலும் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத நிலையில் இருக்க வேண்டும். இதுபோன்ற பள்ளி மாணவர்களை அவர்களின் எதிர்கால நலன் கருதி ஆசிரியர்களும், பெற்றோரும் கண்காணித்து கண்டிப்புடன் வளர்க்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்