SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

2,000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் நீடிக்குமா என்பது குறித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம்!

2020-02-22@ 08:55:05

மும்பை: 2,000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் நீடிக்குமா என்பது குறித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். கடந்த 2016ம் ஆண்டு புழக்கத்தில் இருந்த ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுகளை மத்திய அரசு செல்லாது என்று அறிவித்தது. அதற்கு பதிலாக 2,000. 500 மற்றும் 200 ரூபாய் புதிய நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது. இதில் 2,000 ரூபாய் நோட்டுகளால் பொதுமக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. குறிப்பாக இதற்கு சில்லரை கிடைப்பது சிரமமாக உள்ளது. இந்த நிலையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தப்பட்டதாக தகவல்கள் பரவியது. இதனால் எப்போது வேண்டுமானாலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்படலாம் என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்த நிலையில், இதுகுறித்து பேசிய இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் அகில இந்திய இணை பொதுச்செயலாளர் பி.டி.கிருஷ்ணன், ஊழலையும், கருப்பு பணத்தையும் ஒழிக்கிறோம் என்று கூறிக்கொண்டு மத்திய அரசு 2,000 ரூபாய் நோட்டை கொண்டு வந்தது. ஆனால் அந்த நோட்டை மாற்றுவது என்பது பொதுமக்களுக்கு பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. இதுவரை 2 ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவிப்பது தொடர்பாக எந்த தகவலும் இல்லை. ஆனால் பயன்பாட்டை படிப்படியாக குறைக்கப்போகிறது, என்று கூறியுள்ளார். இவ்விகாரம் குறித்து பேசிய ரிசர்வ் வங்கி அதிகாரிகள், 2,000 ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவிப்பு வெளியாகலாம் என்று சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரவி வருகிறது.

ஆனால் அதுபோன்ற எண்ணம் மத்திய அரசிடம் தற்போது வரை இல்லை. இதுதொடர்பான அதிகாரபூர்வமான தகவல்களும் ரிசர்வ் வங்கிக்கு தெரிவிக்கப்படவில்லை. ஏ.டி.எம். மையங்களிலும் 2,000 ரூபாய் நோட்டுகள் வழக்கம்போல் நிரப்பப்பட்டு வருகிறது. பொதுமக்களும் இதனை எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். பொதுமக்களிடம் இருந்து இதுபோன்ற எந்த புகாரும் வரவில்லை. எனவே சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தவறான செய்தியை பொதுமக்கள் நம்ப வேண்டாம். வழக்கம்போல் 2,000 ரூபாய் நோட்டை வாங்கி பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளனர். முன்னதாக, இந்தியன் வங்கி ஏ.டி.எம்.களில் மார்ச் 1ம் தேதி முதல் 2,000 ரூபாய் நோட்டுகள் வைப்பதில்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்