SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தங்கமே தங்கம்

2020-02-22@ 00:55:27

குழந்தை முதல் குமரி வரை யாரை கொஞ்சவேண்டுமென்றாலும் முதலில் பயன்படுத்தும் வார்த்தையே ‘என் தங்கமில்ல’ என்பது தான். வெறும் வார்த்தைக்கே அத்தனை மதிப்பு என்றால், தங்க ஆபரணத்துக்கு எப்படி என்று நினைத்துப்பாருங்கள். இந்தியாவில் பெண்களுக்கு தங்க நகைகள் மீதான மோகம் அதிகம். ஆண்களுக்கு அதன் மீது மோகம் இல்லை என்று சொல்லாவிட்டாலும்  அதன் மீது பணத்தை முதலீடு செய்கிறார்கள். ஏனென்றால் குடும்ப தேவைகளுக்கு, அவசர செலவுகளுக்கு தங்கத்தின் மீது வங்கி மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் கடன் கிடைக்கிறது. இதனால்  ஆண், பெண் இருபாலரும் தங்கத்தை தள்ளிவைக்க முடியாத ஒப்பற்ற பொருளாகத்தான் பார்க்கின்றனர்.
சர்வதேச சந்தை விலை நிலவரத்துக்கு ஏற்ப தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் இருந்தாலும் அது பெரியளவில் மக்களை பாதிப்பதில்லை. சவரனுக்கு ₹300 உயர்ந்தால் முதலீடு செய்துவைத்துள்ளவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். புதியதாக தங்க நகைகளை வாங்க திட்டமிடுகிறவர்கள் கவலைப்படுகிறார்கள். அதே போன்று விலை இறங்கும் போது முதலீடு செய்தவர்கள் வருத்தப்படுகிறார்கள். திருமணம் போன்ற இதர விசேஷங்களுக்கு தங்க நகை வாங்க நினைப்பவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். பெரும்பாலான குடும்பத்தினர் எப்போதெல்லாம் தங்கத்தின் விலை குறைகிறதோ அப்போது கணிசமாக வாங்கி வைத்துக்கொள்கிறார்கள். ஆனால் நடுத்தர, சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள் சிறுக, சிறுக சேர்த்து வைத்த பணத்தை நகையாக வாங்க ஆசைப்படும் போது, அன்றைய தினம் தங்கத்தின் விலை விவரத்தை தெரிந்து கொண்டு தான் செல்ல வேண்டியிருக்கிறது.

தங்கத்தின் விலை சில நேரங்களில் தினமும் ஏறி, இறங்கும். சில சமயத்தில் ஒரு மாதமானாலும் பெரிய மாற்றங்களின்றி ஏற்றத்திலேயே இருக்கும். சர்வதேச அளவில் பெரிய நிகழ்வுகள், அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டால் நிலவும் பங்குச்சந்தை சரிவால் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது. அதன்படி கடந்த 20 நாட்களுக்கு மேல் சீனாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் பீதியால் சர்வதேச பங்குச்சந்ைத ஸ்தரமற்ற பொருளாதார நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் தங்கத்தின் விலையில் ஒரு நாள் இறக்கும், மற்றொரு நாள் திடீர் ஏற்றமும் நிகழ்ந்து வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு வரை சவரன் ₹31,720க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுவே நகைவரலாற்றில் உச்சபட்ச விலை என்று கருதப்பட்ட நிலையில் தற்போது ₹32,400ஐ தங்கத்தின் விலை எட்டியுள்ளது. கிராம் தங்கம் ₹4051க்கு விற்பனை செய்யப்படுகிறது. தை மாதம் பிறந்தது முதல் தொடர்ந்து முகூர்த்த நாள் என்பதால் இந்த விலையேற்றத்தை சாதாரண மற்றும் நடுத்தர மக்களால் சமாளிக்கமுடியவில்லை என்றே கருதவேண்டியுள்ளது. மீண்டும் விலை இறங்கி ₹30 ஆயிரத்தை தொட ஒரு மாதம் ஆகலாம் என்று தெரிகிறது. கடந்த சில மாதங்களாக வெங்காயம் இல்லத்தரசிகளின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது, அந்த பணியை தற்போது தங்கம் எடுத்துக்கொண்டு விட்டதாக நகை பிரியர்களாக உள்ள இல்லத்தரசிகள் புலம்புவது செவிகளில் தெளிவாக கேட்க முடிகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai

  கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

 • kurosiya

  கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

 • medition2020

  சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

 • in22222

  கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

 • india2020

  கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்