SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

படப்பிடிப்பில் 3 பேர் பலியான விவகாரம் இந்தியன்-2 பட விபத்து வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்

2020-02-22@ 00:50:59

* நடிகர் கமல், இயக்குநர் சங்கருக்கு சம்மன் அனுப்ப முடிவு
* படப்பிடிப்பில் விதிமீறலே விபத்துக்கு காரணம் என விசாரணையில் அம்பலம்
சென்னை: நடிகர் கமல் நடித்து வரும் இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் பலியான சம்பவத்தில், படப்பிடிப்புக்கான அனுமதி பெற்றதில் பல்வேறு சிக்கல்கள் இருந்ததால் இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த வழக்கில் நடிகர் கமல் மற்றும் இயக்குநர் சங்கருக்கு சம்மன் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.நடிகர் கமல் நடிப்பில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் இந்தியன் 2 திரைப்படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் காஜல் அகர்வால் மற்றும் நடிகர் சித்தார்த், கொடுமுடி வேணு, பிரியா பவானி சங்கர், ராகுல் பிரீத்சிங், பாபி சிம்ஹா உள்பட பலர் நடித்து வருகின்றனர்.இந்தப் படத்தின் படப்பிடிப்பு செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈ.வி.பி. பிலிம் சிட்டியில் பிரமாண்டமாக செட் அமைத்து நடந்து வருகிறது. அதன்படி கடந்த 19-ம் தேதி இரவு படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது, பளு தாங்காமல் உயரத்தில் இருந்த கிரேன் அறுந்து கீழே விழுந்தது. அப்போது உதவி இயக்குநர் கிருஷ்ணா, ஆர்ட் உதவியாளர் சந்திரன், தயாரிப்பு உதவியாளர் மது ஆகியோர் மீது கிரேன் விழுந்ததில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் படக் குழுவைச் சேர்ந்த 9 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த கோர விபத்தை தொடர்ந்து இந்தியன் 2 திரைப்பட படப்பிடிப்பு தற்காலிகமாக  நிறுத்தப்பட்டுள்ளது.

விபத்து குறித்து நசரத்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதில் கவனக்குறைவாக பணியில் இருந்ததாக கிரேன் ஆபரேட்டர் ராஜன் என்பவர் மீது போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் படத்தயாரிப்பு நிறுவனமான லைக்கா மற்றும் அதன் நிர்வாகிகள் பலர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் இந்தியன் 2 திரைப்படத்தின் நடிகரான கமல்ஹாசன், மற்றும் திரைப்படத்தின் இயக்குநர் ஷங்கர், நடிகை காஜல் மற்றும் தயாரிப்பு நிர்வாகிகளிடம் விசாரணை நடத்த அனைவருக்கும் சம்மன் அனுப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த கிரேன் ஆபரேட்டர் ராஜனை நசரத்பேட்டை போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கிடையே, ஈ.வி.பி. பிலிம் நகரில் பிரம்மாண்டாக செட் அமைக்க திரைப்பட தயாரிப்பு நிறுவனம் சென்னை மாநகர காவல் துறை அல்லது மாவட்ட ஆட்சியரிடம் முறையாக அனுமதி பெற்று இருக்க வேண்டும். ஆனால் இந்தியன் 2 படப்பிடிப்புக்கு செய்யப்பட்ட பிரமாண்ட செட்டிற்கு முறையாக அனுமதி பெறப்படவில்லை என்று கூறப்படுகிறது.

 மேலும், 500க்கும் மேற்பட்டோர் படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிய போது முறையாக எந்த வித பாதுகாப்பு வசதியையும் படப்பிடிப்பு நிறுவனம் ஏற்படுத்தி தரவில்லை. நூற்றுக்கும் மேற்பட்ட படப்பிடிப்பு குழுவினர் ஒரு இடத்தில் வேலை செய்யும் போது, பாதுகாப்பு நடவடிக்கையாக சட்டப்படி ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ குழு மற்றும் மீட்பு குழுக்கள் தயாராக வைத்திருக்க வேண்டும். ஆனால் இந்தியன் 2 படப்பிடிப்பில் சட்டப்படி எந்த வித விதிமுறைகளையும் திரைப்படம் தயாரிப்பு நிறுவனம் கடைப்பிடிக்கவில்லை என்று கூற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதேநேரம் விபத்து நடந்த போது படப்பிடிப்பு தளத்தில் மருத்துவ குழுக்கள் இருந்து இருந்தால், படுகாயமடைந்த 3 பேரையும் காப்பாற்றி இருக்கலாம் என்றும் படப்பிடிப்பில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட செட் விதிமீறல்களே விபத்துக்கு முக்கிய காரணம் என்று படப்பிடிப்பு ஊழியர்களே குற்றம்சாட்டியுள்ளனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் அரசு அனுமதிக்கப்பட்ட விதிகளின் படி திரைப்படத்தின் செட்கள் பாதுகாப்புடன் அமைக்கப்படவில்லை என்றும், சட்டத்திற்கு முரணாக இந்தியன் 2 திரைப்படத்தின் செட்கள் அனைத்தும் அமைத்து இருந்ததே 3 பேர் இறப்புக்கு காரணம் என்று விசாரணையில் தெரியவந்தது.இதையடுத்து இந்த வழக்கை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நசரத்பேட்டை காவல்நிலையத்தில் இருந்து மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி நேற்று இரவு அதிரடியாக உத்தரவிட்டார். அதைதொடர்ந்து நசரத்பேட்டை போலீசார் வழக்கிற்கான ஆவணங்கள் அனைத்தையும் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ஈஸ்வரமூர்த்தியிடம் ஒப்படைத்தனர். அதை தொடர்ந்து இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவு நேற்று இரவே தனது விசாரணையை தொடங்கினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்