SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

110 அங்கன்வாடி மையங்களை மேம்படுத்த சன் டி.வி. ரூ.3.63 கோடி நிதி உதவி

2020-02-22@ 00:50:18

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் உள்ள 110 அங்கன்வாடி மையங்களை மேம்படுத்த சன் டி.வி. ரூ.3.63 கோடி நிதி உதவி அளித்துள்ளது. கல்வி நிலையங்களில் அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்குதல், மாணவர்களுக்கான கற்றல் சூழலை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு சமூக மேம்பாட்டுப் பணிகளுக்காக சன் டி.வி. தொடர்ந்து நிதி உதவி அளித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சென்னை, சேலம், தர்மபுரி, ராமநாதபுரம், திண்டுக்கல், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் உள்ள 110 அங்கன்வாடி மையங்களை மேம்படுத்த சன் டி.வி. 3 கோடியே 63 லட்சத்து 5100 ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது.  

இதற்கான காசோலையை, க்ரை தொண்டு அமைப்பின் தலைமை செயல் அதிகாரி பூஜா மர்வாஹா, தென்மண்டல இயக்குநர் கார்த்திக் நாராயணன் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் சன் டி.வி. சார்பில் காவேரி கலாநிதி மாறன் வழங்கினார். இந்த நிதி உதவியின் மூலம், தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்று க்ரை நிர்வாகிகள் தெரிவித்தனர். ஏழை எளியோர் நலன், சுகாதார மேம்பாடு, அடிப்படைக் கட்டமைப்பு உள்ளிட்ட சமூக மேம்பாட்டுப் பணிகளுக்காக சன் டி.வி. மற்றும் சன் பவுண்டேஷன் இணைந்து இதுவரை சுமார் ரூ.104 கோடி  நிதி உதவி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்