SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குழந்தைகள் நல்வாழ்வு நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 131வது இடம் : ஐநா அறிக்கை வெளியீடு

2020-02-21@ 04:53:42

நியூயார்க்: ஐநா சபை வெளியிட்டுள்ள குழந்தைகளுக்கு நல்வாழ்வு அளிக்கும் திறன் படைத்த நாடுகள் பட்டியலில் இந்தியா 131வது இடத்தையும், உகந்த சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கிய வாழ்வுக்கான நிலைத்தன்மை குறியீட்டில் 77வது இடத்தையும் பெற்றுள்ளது. உலக சுகாதார நிறுவனம், யுனிசெப், லான்செட் மருத்துவ இதழ் ஆகியவை இணைந்து உலகம் முழுவதும் 180 நாடுகளில் ஆய்வு மேற்கொண்டது. 40 குழந்தைகள் நல நிபுணர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்களைக் கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வில், குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் ஆரோக்கியமான வாழ்வு அளிக்கக் கூடிய திறன் படைத்த மற்றும் அதற்கேற்ற சுற்றுச்சூழல் அமைப்பைக் கொண்ட நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இப்பட்டியல் நிலைத்தன்மை குறியீடு, செழிப்பு குறியீடு என இரு பிரிவாக வெளியிடப்பட்டுள்ளது. செழிப்பு குறியீடு என்பது 5 வயதுக்குப்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதம், பிரசவ கால குழந்தை இறப்பு, தற்கொலை, குழந்தைகளுக்கான மருத்துவ சேவைகள், சுகாதாரம், தூய்மை மற்றும் தீவிர ஏழ்மை இல்லாமை ஆகியவற்றையும், கல்வி, வளர்ச்சி, ஊட்டச்சத்து, சுதந்திரம், வன்முறையிலிருந்து பாதுகாத்தல் போன்றவற்றையும் கொண்டு கணக்கிடப்படும்.

நிலைத்தன்மை குறியீடு என்பது குறிப்பிட்ட நாடுகளில் கார்பன்டை ஆக்சைடின் வெளிப்பாடு, எதிர்கால நிலைத்தன்மை வளர்ச்சிக்கான நாடுகளின் பங்களிப்பு ஆகியவை கணக்கிடப்படும். இதில் நிலைத்தன்மை குறியீட்டில் இந்தியா 77வது இடத்தையும், செழிப்பு குறியீட்டில் 131வது இடத்தையும் பிடித்துள்ளது. குழந்தைகளின் எதிர்காலம் ஆரோக்கியமாகவும், அதற்கேற்ற சுற்றுச்சூழலையும் கொண்டிருப்பதற்கான ஐநாவின் இலக்கை உலகில் எந்த ஒரு நாடுமே எட்டவில்லை என அறிக்கையில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைள் இறப்பு விகிதம் குறைவு, அவர்களுக்கு ஆரோக்கியம், கல்வி, ஊட்டச்சத்தை வழங்கும் நாடுகளில் நார்வே முதலிடத்திலும், தென் கொரியா, நெதர்லாந்து ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பெற்றாலும், அந்நாடுகள் கார்பன்டை ஆக்சைடு வெளியிடும் பட்டியலில் முறையே 156, 166, 160வது இடங்களை பிடித்து பின்தங்கி உள்ளன. ஒருபுறம் சுற்றுச்சுழல் பாதிப்பால் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள் என்றால் மறுபுறம் ஆபத்தை விளைவிக்கும் வர்த்தக கலாச்சாரமும் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சுகாதாரமற்ற நொறுக்குத் தீனி, கேடு விளைவிக்கும் இனிப்பு வகைகள் போன்றவைகள் அதிகளவில் விளம்பரப்படுத்தப்படுகின்றன. இவற்றை உண்பதால் குழந்தைகளின் ஆரோக்கியம் கெடுவதுடன் உடல் பருமன் பிரச்னைகளும் அதிகரிப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க உலகளாவிய புதிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் மருத்துவ நிபுணர்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai

  கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

 • kurosiya

  கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

 • medition2020

  சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

 • in22222

  கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

 • india2020

  கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்