SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சபாஷ் சரியான முடிவு

2020-02-21@ 00:13:14

ஆதார் அட்டையுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஆதார் அறிமுகமானதில் இருந்து பல்வேறு தரப்பில் இருந்து கோரப்பட்டு வரும், ஆதாருடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் திட்டத்தை இப்போது மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. எந்த வகையில் பார்த்தாலும், இது மிக முக்கியமான நடவடிக்கையாகும். ஆதாருடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைத்துவிட்டால், தனியாக வேறு எந்த அடையாள அட்டையும் வாக்களிக்க தேவையில்லை. நேராக வாக்குச்சாவடிக்கு சென்று, விரல் ரேகையை அழுத்தினால்போதும். சம்பந்தப்பட்டவர்தான் குறிப்பிட்ட வாக்காளர் என்பதை ஊர்ஜிதம் செய்து, உடனடியாக அவரை வாக்களிக்க அனுமதிக்க முடியும். அடுத்ததாக, வாக்காளர்கள் இந்த வாக்குச்சாவடிக்குதான் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லாமல் ஆகிவிடும். தங்களுக்கு பிடித்த வாக்குச்சாவடியில் அவர்கள் வாக்களிக்க முடியும்.

இன்னும் சொல்லப்போனால், கன்னியாகுமரியில் இருப்பவர், காஷ்மீரில் கூட வாக்களிக்க முடியும். இதன் மூலம் வாக்குப்பதிவு சதவீத எண்ணிக்கையை அதிகரிக்க செய்ய முடியும். இதன் அடுத்தக்கட்டமாக வாக்குச்சாவடிக்கு செல்லாமலேயே வீட்டில் இருந்தபடியும், வாக்களிக்கும் முறை குறித்தும் சென்னை ஐஐடியுடன் இணைந்து தேர்தல் ஆணையம் ஆராய்ந்து வருகிறது. அதுபோன்ற நிலைமை வந்துவிட்டால், வீட்டில் இருந்தபடியே மக்கள் வாக்களிக்க முடியும். வெயில், மழை, குளிர் என்று எந்த சீதோஷ்ண நிலை குறித்தும் கவலைப்பட வேண்டிய தேவையிருக்காது. அத்துடன் மிகப்பெரிய, பெரிய இயந்திரங்களை வாக்குச்சாவடிக்கு சுமந்து செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. வாக்களிப்பவர்கள், தாங்கள் வாக்குப்பதிவு செய்த கட்சிக்கான சின்னத்தை இணையத்திலேயே சரிபார்த்துக் கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்பட்டுவிட்டால், இந்த திட்டம் மிகப்பெரிய வெற்றி பெறும்.

ஏனெனில், பல நேரங்களில் வாக்களித்தவர்களுக்கு உண்மைத்தன்மை இல்லாமல் போகும்போது, அதில் பிரச்னை ஏற்படுகிறது. அதை எப்போது வேண்டுமானாலும் சரிபார்த்துக் கொள்ள முடியும் என்ற நிலை வந்தால், அதன் மூலம் பிரச்னை தீரும்.
எல்லாவற்றுக்கும் மேலாக மிகச்சில விநாடிகளில் தேர்தல் முடிவை தெரிந்து கொள்ள முடியும். வாக்குப்பெட்டி பாதுகாப்பு, வாக்குச்சாவடி பாதுகாப்பு, வாகனங்கள் என்று பெருமளவிலான செலவு குறையும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-05-2020

    22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்