SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கூண்டை விட்டு பறந்துபோன கிளிகளுக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுவதை பற்றி சொல்கிறார் : wiki யானந்தா

2020-02-20@ 00:16:27

‘‘புது முகங்களா... பழைய முகங்களா...’’ இழுத்து பேசினார் பீட்டர் மாமா. ‘‘இலை கட்சியில ராஜ்யசபா பதவி காலம் முடிய உள்ள எம்பிக்களின் மீது மக்களுக்கு நம்பிக்கை சுத்தமாக போச்சாம். இவங்களை நிறுத்தினால் ஒரு அல்வா மாவட்டமும் முத்து மாவட்டமும் படுபாதாளத்தை சந்திக்கும்... கட்சி வேலைகளில் சுறுசுறுப்பாக இருப்பவர்களையும் மக்கள் செல்வாக்கு உள்ளவர்களையும் எம்பியாக்கினால் கட்சி இந்த இரண்டு மாவட்டங்களில் தேறும்... சமீபத்தில் மூன்றாக பிரித்த மாவட்டத்தில் ஒருவரை எம்பியாக்கினீங்க... அவரால ஒரு பலனும் இல்ல. அந்த இடத்தில் மைனாரிட்டி ஓட்டே கிடைக்கல...  அதனால மக்கள் செல்வாக்கு உள்ள நபர்தான் நமக்கு தேவை... மற்றபடி ‘சீன்’ ஓட்டுற நபர்களை மீண்டும் எம்பியாக்கிடாதீங்க என்று இலை இரட்டையர்களுக்கு நிறைய கடிதம் போயிருக்காம்... அதனால விஜி, பிளாக்பியர்ல் ஆகியோருக்கு சீட் கொடுக்காதீங்க என்று நேரடியாகவும் சிலர் சொல்லி இருக்காங்களாம்... அதனால இந்த முறை இரட்டையர்கள் தலா ஒரு சீட்டை தங்கள் ஆதரவாளர்களுக்கு கொடுக்க முடிவு செய்து இருக்காங்களாம்... அதனால பழைய முகங்கள் கட்சி பணியாற்றினால் எம்எல்ஏ சீட் கொடுப்பதாக வாக்குறுதி ெகாடுத்து இருக்காங்களாம்... இதனால உண்மையான இலை கட்சிக்காரங்க சந்தோஷத்துல இருக்காங்களாம்... சீட் கிடைக்காதவங்க துக்கத்துல இருக்காங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தாமரை தரப்புல இன்று... நாளை... நாளை மறுநாள்னு இழுக்கிறாங்களே... சின்ன மாநிலம் கேரளாவுல கூட நியமிச்சுட்டாங்க... தமிழ்நாட்டுல ஏன் இந்த லேட்...’’ என்று இழுத்தார் பீட்டர் மாமா.

‘‘தாமரை எடுத்த சர்வே படி பெரும்பாலான தாமரை தலைவர்கள் மாவட்ட தலைவர்கள் ரேஞ்சில்தான் இன்னும் இருக்காங்களாம்... இதுல இசையானவர் உள்பட சிலர் விதிவிலக்காம்... மற்ற தாமரை தலைவர்கள் எல்லாம் இரண்டு மாவட்டத்துக்கு மேலே செல்வாக்கு இல்லாத தலைவர்களாகதான் இருக்காங்களாம்... சல்லடை போட்டு தேடியும் மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர் கிடைக்கலையாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தீபாவளி முடிந்தும்... அதில் ஏற்பட்ட பிரச்னை அடுத்த தீபாவளி வரை முடியாது போலிருக்கே...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘சென்னையை அடுத்த பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த தீபாவளி பண்டிகைக்கு முன்பு லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக சோதனை செய்தனர். இதில் கணக்கில் வராத ரூ.22.55 லட்சம் மற்றும் 12 சவரன் நகைகள் கைப்பற்றப்பட்டன. மேலும் இதில் தொடர்புடைய இரண்டு வட்டார வளர்ச்சி அலுவலர், ஒரு துணை வட்டார வளர்ச்சி அலுவலர், 8 ஊராட்சி செயலர் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டதுடன், அவர்கள் வீடுகளிலும் சோதனை செய்யப்பட்டது. இதில் கணக்கில் வராத ரூ.10 லட்சம் கைப்பற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த லஞ்ச ஒழிப்பு துறை சம்பந்தப்பட்டவர்களை மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் செய்ய அரசுக்கு பரிந்துரை செய்தது. அரசும் பரிந்துரையை ஏற்று நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியது. ஆனால் ஊரக வளர்ச்சி துறை உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்டவர்களிடம் ரூ.2 முதல் ரூ.5 லட்சம் வரை பெற்று கொண்டு, எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதுதான் லஞ்சத்தை ஒழிக்க வேண்டிய போலீசிடம் லஞ்சம் கொடுத்தால் நடவடிக்கையே இருக்காது என்று அந்த ஒன்றியத்தை ேசர்ந்த நேர்மையான அதிகாரிகள் பேசிக் கொள்கிறார்கள்...’’ என்றார் விக்கியானந்தா.

‘வெயிலூர் மாவட்டத்துல அரசியல் களம் சூடாக இருக்காமே... அதை சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘இலையில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் தாய் கட்சிக்கு இழுக்கும் நடவடிக்கை நடந்து வருகிறது. அப்போது, தொப்பிக்காரரின் பின்னால் பலர் சென்றனர். நாளடைவில் தொப்பிக்காரரின் கட்சி கலகலத்துப் போனதால் இறக்கை முளைத்து பறந்த கிளிகள் மீண்டும் கூட்டிற்குள் வரத் தொடங்கியுள்ளது. இந்த வாய்ப்பை நீண்டகாலமாக எதிர்பார்த்து காத்திருந்த அதிமுக தலைமை, மாற்று கட்சியில் இருந்து வர்றவங்களை வளைச்சுப் போடுங்க... நம்ம பவரை அதிகரிக்கனும்... அடுத்து வரும் தேர்தல் களத்துல ஜெயிக்கனும் என்று ரத்தத்தின் ரத்தங்களுக்கு ஏகப்பட்ட உத்தரவுகள் மா.செ.களுக்கு அசைன்மென்ட் போட்டிருக்காங்களாம். மேலிடத்து உத்தரவை ஏற்று அரக்கோணம் எம்எல்ஏ வறிஞ்சிக்கட்டிக்கிட்டு களத்துல இறங்கிட்டாராம். அதிமுகவில் இருந்து அமமுகவுக்கு தாவிய கட்சி பிரமுகர்களை சந்தித்து, நம்ம கட்சியில் நல்ல எதிர்காலம் இருக்கு... ஏன் தயங்குறீங்க.... வந்துடுங்க.... கட்சிப் பொறுப்புகள் தயாராக இருக்கு.... நீங்க வந்தா மட்டும்போதும்... பார்த்து செய்யுங்க... முடிச்சிடலாம், என்று தொப்பிக்கார கட்சியினரை இழுக்கும் வேலையில் பரபரப்புடன் செயல்படுகிறாராம். இதுதொடர்பாக 3 பேருக்கு கட்சியில் பொறுப்பும், சிலருக்கு சிபாரிசும் செய்திருக்காராம்.

இதனால் கட்சிக்கு உண்மையா இருக்கிறவங்களை விட ஏமாத்திட்டு போய், திரும்பி வர்றவங்களுக்கு தான் காலம். கட்சி தாவிச்சென்ற கும்பலுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கிறாங்க, காலமெல்லாம் கட்சி தான் முக்கியம் என்று இருந்த எங்களுக்கு கட்சியில மரியாதையே இல்லை என்று ரத்தத்தின் ரத்தங்கள் கடுப்பில் கொந்தளித்து வருகிறார்களாம். இதனை அறிந்த அரக்கோணம் எம்எல்ஏ கட்சியை பலப்படுத்த மேலிடம் கொடுத்த அசைன்மென்ட்படிதான் நடக்கிறேன். என் மேல வருத்தப்படாதீங்க... உங்களுக்கு என்ன உதவி வேணுமோ கேளுங்க, முடித்துவிடலாம்... என்று ரத்தத்தின் ரத்தங்களை பார்த்து கேட்க. ரத்தங்கள் கொதித்து போயுள்ளார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai

  கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

 • kurosiya

  கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

 • medition2020

  சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

 • in22222

  கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

 • india2020

  கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்