பி.எஸ்சி நர்சிங் உட்பட 7 படிப்பு தரவரிசை பட்டியல், ரேண்டம் எண் வெளியீட

Date: 2013-07-24@ 01:17:56

சென்னை : பி.எஸ்சி நர்சிங் உட்பட 7 மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் மற்றும் ரேண்டம் எண் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் பி.எஸ்சி நர்சிங், பி.பார்ம், பிபிடி, பிஏஎஸ்எல்பி (செவித்திறன், பேச்சு மற்றும் மொழி நோய்க்குறியியல் பட்டப்படிப்பு), பி.எஸ்சி ஐஎம் (ரேடியாலஜி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி), பி.எஸ்சி ஆர்டி (ரேடியோ தெரபி டெக்னாலஜி), பிஓடி படிப்புகள் உள்ளன.

இந்த 7 மருத்துவம் சார்ந்த பட்ட படிப்புகளுக் கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பம் அரசு மருத்துவ கல்லூரிகளில் கடந்த ஜூன் 24ம் தேதி முதல் ஜூலை 5ம் தேதி வரை விற்பனை செய்யப்பட்டது. 23 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டது. இவற்றில் 20,311 விண்ணப்பங்கள் விற்பனையானது. பூர்த்தி செய்து சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் 16,754 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பிற்கான 2ம் கட்ட கவுன்சலிங் ஆகஸ்ட் முதல் வாரம் தொடங்க உள்ளது. இதையடுத்து, மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங்கை ஆகஸ்ட் 3வது வாரத்தில் தொடங்கு கிறது. மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்பிற்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசை பட்டியல் மற்றும் ரேண்டன் எண் tஸீலீமீணீறீtலீ.ஷீக்ஷீரீ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

how do you know your wife cheated on you thesailersweb.com my spouse cheated on me now what

Like Us on Facebook Dinkaran Daily News