SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

துளித் துளியாய்

2020-02-19@ 00:24:42

* 2020 ஐபிஎல் டி20 தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. மும்பை வாங்கடே ஸ்டேடியத்தில் மார்ச் 29ம் தேதி நடக்கும் தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதுகிறது. மொத்தம் 57 நாட்களுக்கு நடைபெற உள்ள இந்த தொடரின் இறுதிப் போட்டி மே 24ம் தேதி நடைபெறும். இம்முறை 6 பிற்பகல் ஆட்டங்கள் மட்டுமே நடக்க உள்ளன.
* பிபா யு-17 மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடர் இந்தியாவில் நவம்பர் 2ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை நடைபெற உள்ளது. அகமதாபாத், கவுகாத்தி, புவனேஸ்வர், கொல்கத்தா, நவி மும்பையில் போட்டிகள் நடைபெறும். இறுதிப் போட்டி நவம்பர் 21ம் தேதி நவி மும்பையில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
* அடிலெய்டில் இன்று நடைபெறும் ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து - தாய்லாந்து அணிகள் மோதுகின்றன. நாளை நடக்க உள்ள கடைசி பயிற்சி ஆட்டத்தில் வங்கதேசம் - பாகிஸ்தான் அணிகள் களமிறங்குகின்றன.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்