SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலக கோப்பை பயிற்சி ஆட்டம் 2 ரன் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி

2020-02-19@ 00:24:40

பிரிஸ்பேன்: ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில், இந்திய அணி 2 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது. ஆலன் பார்டர் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 107 ரன் எடுத்தது. 9வது வீராங்கனையாகக் களமிறங்கிய ஷிகா பாண்டே அதிகபட்சமாக 24 ரன் (16 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.

தீப்தி ஷர்மா 21, வஸ்த்ராகர் 13, ஷபாலி 12, கேப்டன் ஹர்மான்பிரீத் 11, டானியா 10 ரன் எடுக்க, மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்னில் வெளியேறினர். அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 105 ரன் எடுத்து தோல்வியைத் தழுவியது.
அந்த அணியின் தொடக்க வீராங்கனை லீ ஆன் கிர்பி 42 ரன், ஹேலி மேத்யூஸ் 25, கேப்டன் ஸ்டெபானி டெய்லர் 16, சினெல்லி ஹென்றி 17 ரன் எடுத்தனர். இந்திய அணி பந்துவீச்சில் பூனம் யாதவ் 3, ஷிகா, தீப்தி, ஹர்மான்பிரீத் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். நாளை மறுநாள் சிட்னியில் நடைபெற உள்ள ஏ பிரிவு தொடக்க லீக் ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதுகின்றன.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்