SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தூரிகை ட்ரோன்

2020-02-18@ 18:02:54

நன்றி குங்குமம் முத்தாரம்

ட்ரோன் மூலம் ஓவியம் வரைய முடியுமா? ‘முடியும்’ என்று சொன்னதோடு அதை நிருபித்தும் கட்டினார் அமெரிக்காவைச் சேர்ந்த ஓவியர் காட்சு. சமீபத்தில் அவர் பிரமாண்டமான சுவர்கள், பதாகைகளில் ஓவியம் வரைய உறுதுணையாக இருக்கும் ட்ரோனைக் கண்டுபிடித்துள்ளார். பெயிண்ட் பாக்ஸை இந்த ட்ரோனில் அழகாக பொருத்திக்கொள்ள முடியும்.  ஒருமுறை ட்ரோனை சார்ஜ் செய்துவிட்டால் போதும், பத்து நிமிடங்களுக்கு ட்ரோன் இடைவிடாமல் பறக்கும்.

சுவரில் மோதாமல் தேவையான இடத்துக்கு நகர்த்தி பெயிண்டை ஸ்பிரே செய்வதற்கு கன்ட்ரோல் வசதியும் இருக்கிறது. இது ஓவியருக்குப் பக்க பலமாக இருக்கிறது. பல அடுக்குமாடி கட்டடங்களில் அந்தரத்தில் தொங்கிக்கொண்டு, உயிரைப் பணயம் வைத்து ஓவியம் வரைபவர்களுக்கு இந்த ட்ரோன் ஒரு மாற்றாக இருக்கும். இதன் விலை சுமார் ரூ. 2 லட்சம்.

தொகுப்பு: க.கதிரவன்


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்