SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஊக்குவிக்குமா அரசு?

2020-02-18@ 03:01:27

உலகில் அதிக எண்ணிக்கையில் இளைஞர்களை கொண்ட இந்தியாவில் குறைந்த எண்ணிக்கையில் தான் விளையாட்டு சாதனையாளர்கள் உள்ளனர். குறிப்பாக, கிரிக்கெட்டை தவிர மற்ற விளையாட்டுகளில் நாம் ஜொலிக்காமல் இருப்பது கவலைப்பட வேண்டிய விஷயம். திறமைகள் இருந்தும் அதை வெளிக்காட்ட வாய்ப்பின்றி லட்சக்கணக்கான இளைஞர்கள் தவித்து வருவது தொடர்கதையாக உள்ளது. கிராமங்களில் உள்ள மைதானங்களில் பெரும்பாலும் விளையாட்டு உபகரணங்கள் இருப்பது கிடையாது. முக்கியமாக, மைதானமே புதர்மண்டி கிடக்கும் அவலநிலை தான் தொடர்கிறது. கிராமந்தோறும் ஆயிரம் உசேன் போல்ட்கள் உள்ளனர்.

அதற்கு மிகச்சிறந்த உதாரணம், கர்நாடக மாநிலம், மங்களூருவில் சமீபத்தில் நடந்த எருது விடும் போட்டி (கம்பளா) மூலம் உலகை திரும்பி பார்க்க வைத்துள்ள சீனிவாஸ் கவுடா. மத்திய அரசு அவருக்கு உதவ முன்வந்துள்ளது வரவேற்க வேண்டிய விஷயம். அவருக்கு முறையான பயிற்சி அளித்தால் நிச்சயம் சாதிப்பார். விளையாட்டு போட்டிகளில் கிராமப்புற இளைஞர்களின் பங்களிப்பு கண்டிப்பாக இருக்க வேண்டும். அரசியலில் நுழையாமல் இருந்தால் தான், விளையாட்டு துறையில் நாம் உச்சம் தொட முடியும்.  உள்ளூரில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றும் வெளிநாடுகளுக்கு செல்ல பணம் இல்லாத காரணத்தால் ஏராளமான இளைஞர்கள் தவித்து வருகின்றனர். ஒரு கட்டத்தில் பொருளாதார நெருக்கடி காரணமாக, விளையாட்டை கைவிட வேண்டிய நிலையும் நேரிடுகிறது.

ஓட்டப்போட்டி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு மற்றும் தனித்திறமைகள் உள்ள இளைஞர்கள் தங்களது திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில், மத்திய அரசு புதிய இணையதள வசதியை தொடங்கலாம். கண்காணிக்க தனிக்குழு ஒன்றை ஏற்படுத்தலாம். இளைஞர்கள் தங்களது திறமை அடங்கிய வீடியோக்களை அந்த இணையதளத்தில் பதிவிடலாம். அவற்றை அந்த குழு ஆராய்ந்து திறமைசாலிகளை தேர்ந்தெடுத்து பயிற்சி அளிக்கலாம். இதன் மூலம் விளையாட்டில் சாதிக்க துடிக்கும் இளைஞர்கள் பயனடைய வாய்ப்பு உள்ளது. முக்கியமாக, பெண்கள் விளையாட்டு போட்டிகளில் நுழைவதே கடினமாக உள்ளது.

பயிற்சியாளர் பிரச்னை தொடங்கி பல்வேறு இன்னல்களை கடந்து சாதிக்க வேண்டிய நிலை பெண்களுக்கு உள்ளது. இந்த நிலையை மாற்றி, விளையாட்டு துறைகளில் பெண்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
விளையாட்டு போட்டிகள் சாதிப்பதற்கு மட்டுமல்ல... நல்ல ஆரோக்கியமான சமுதாயம் உருவாகவும் அவசியமாகிறது. எனவே சிறுவயதில் படிப்புக்கு தருவது போல, விளையாட்டுக்கும் அதிக முக்கியத்துவம் தர வேண்டியது பெற்றோரின் கடமை. மேலும் அழிந்து வரும் பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்குவிக்க வேண்டிய பொறுப்பும் அரசுக்கு உள்ளது. இனி வரும் காலங்களில் புது வழிமுறைகளை கையாண்டு, திறமை உள்ளவர்களை ஊக்குவித்து அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் முன்னிலை பெரும் முயற்சியில் அரசு இறங்க வேண்டும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai

  கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

 • kurosiya

  கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

 • medition2020

  சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

 • in22222

  கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

 • india2020

  கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்