SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டபுள் கேம் ஆடிய திண்டுக்கல் பூட்டுக்கார மந்திரியின் ஆட்டத்தை சொல்கிறார்: wiki யானந்தா

2020-02-18@ 00:17:27

‘‘பூட்டுக்கார மந்திரி தொழிலாளர்களுக்கு ‘லாலி பாப்’ கொடுத்த விஷயத்தை சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘குமரி மாவட்டத்தில் 2016ம் ஆண்டு முதல் அரசு ரப்பர் ேதாட்ட தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள உயர்வு தரணும். ஆனால் சம்பள உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்த போது, இடைக்கால நிவாரணமாக அறிவிக்கப்பட்ட 23 ஐ நிரந்தர சம்பள உயர்வாக வைச்சுக்க சொன்னாங்களாம். இதை ஏற்றுக் கொள்ளாத தொழிலாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து 47 முறை தொழிலாளர் நல அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தும் தோல்வியில்தான் முடிந்ததாம். கடந்த ஆண்டு ஜூன் மாதம், நாகர்கோவில் வந்த திண்டுக்கல் பூட்டு மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் தொழிற்சங்க பிரதிநிதிகளை அழைத்து முதல்வரின் கவனத்துக்கு இந்த பிரச்னையை கொண்டு சென்று நிச்சயம் சம்பள உயர்வு வாங்கி தருவேன்னு சொன்னாராம்.

அப்டியே ஊழியர்களை வெளியில் அனுப்பிவிட்டு அவர்கள் சந்ேதாஷப்படட்டும்னு சொன்னேன். நான் சொன்னதை கண்டு கொள்ளாதீர்கள். சம்பள உயர்வு எல்லாம் கிடையாது என்றாராம். இதனால் தொழிற்சங்க வேலை நிறுத்தத்தை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. அரசு ரப்பர் கழக சேர்மன், குமரி மாவட்டம் வந்தால் கூட மிக முக்கியமான பிரச்னையான ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் பிரச்சினை பற்றி பேசுவதில்லை. கெஸ்ட் ஹவுசில், அதிகாரிகளை சந்தித்து விட்டு சென்று விடுகிறார். அதிகாரிகள் வேலை நிறுத்த நோட்டீசை பார்த்ததும் நாங்களே அரசு ரப்பர் கழகத்தை மூடி விட்டு வேறு மாவட்டத்துக்கு போக போகிறோம். நீங்கள் வேலை நிறுத்தம் செய்து என்ன கிடைக்க போகிறது என தொழிலாளர்களிடம் கிண்டலாக கேட்கிறார்களாம். திண்டுக்கல் பூட்டு அமைச்சரின் உறுதி மொழியை தான் நம்பி இருந்தோம். அமைச்சருக்கு இந்த பிரச்னை பற்றியே நினைவு இல்லையாம். சிறுவனை அழைத்து செருப்பை கழற்ற சொன்னவரு, எப்படிய்யா, நம்மள மாதிரி பாவப்பட்ட ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் பிரச்னை ஞாபகத்துக்கு வந்து அதைப் பற்றி முதல்வருடன் பேசுவாரு என்று, ரப்பர் தொழிற்சங்கத்தினர் கடும் வேதனையுடன் கூறி வருகிறார்கள்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தன்னை நம்பி வந்த தொழிலாளர்களின் கோபத்தை தணிக்க ‘லாலி பாப்’ போன்று இனிப்பாக பேசி அனுப்பியதுதான் மிச்சம். வேறு என்ன மேட்டர் இருக்கு... என்றார் பீட்டர் மாமா. ‘‘இலை கட்சியில இருந்தா இஷ்டத்துக்கு பேசலாம் என்பது இப்ேபாது எல்லோரும் தெரிஞ்சு வைச்சிருக்காங்க போல... ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில சமீபத்துல ஜெயலலிதா பிறந்த நாள் ஆலோசனை கூட்டம் ‘சாமி’ பெயரை கொண்ட மாவட்ட முக்கிய பிரமுகருக்கு, சொந்தமான மண்டபத்தில் நடந்துச்சு.... இதுல கலந்துக்கிட்ட மகளிரணியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் அவரது மனைவி பேசும்போது அனல் தெறிச்சதாம்... ‘நடந்து முடிஞ்ச உள்ளாட்சி தேர்தல்ல கமுதி போன்ற இடங்கள்ல கூட சொந்த கட்சிக்காரங்க உள்ளடி வேலை பார்த்துட்டீங்க... கூட்டணி கட்சிக்காரங்களாலும் வெற்றி பறிபோயிருச்சு... கூட்டணிக்கு எல்லாம் சீட்டே  கொடுத்திருக்கக் கூடாது... தப்பு பண்ணிட்டோம்.... வரும் நகராட்சி, பேரூராட்சி தேர்தல்ல இலை கட்சியில எவன் நிக்குறானோ, அவனுக்கு தான் சீட்டு.... இதை முடிவு செஞ்சுட்டோம். எங்களை யாரும் எதுவும் செஞ்சிட முடியாது’ என ஒருமையில் பேசி விட்டு உட்கார்ந்திட்டாங்களாம்... மேடையிலிருந்த முன்னாள் எம்பி, முன்னாள் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட ‘சீனியர்களே’ இவரது பேச்சுக்கு முகம் சுழிச்சாங்களாம்...  கூட்டணி கட்சிக்காரங்க, ‘ஜெயலலிதா கூட இப்படி ஒருமையில் பேசியது கிடையாது... இந்தம்மா இப்படி கண்டபடி பேசுதே’ என்று கொந்தளிச்சுட்டாங்களாம்... மாவட்ட அதிமுகவிலும் இதே ரியாக்‌ஷன்தானாம்... கோபத்தை தணித்துக் கொள்வதற்காக, ஆளுங்கட்சி, கூட்டணி கட்சியினர் பெண் நிர்வாகியின் ‘ஒருமை பேச்சை’, சமூக வலைத்தளங்களில் பரவ விட்டிருக்காங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கிரிவலம் மாவட்டத்துல என்ன விசேஷம்...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘முதல் கட்ட உள்ளாட்சி தேர்தல் முடிந்து திருவண்ணாமலையில் அனைத்து ஒன்றியங்களிலும் மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பேற்று கூட்டங்களும் நடந்து வருகிறது. இதில் வந்தவாசி ஊராட்சி ஒன்றியக்குழுவின் முதல் கூட்டம் வரும் 5ம் தேதி நடக்க உள்ளது. இதற்கான அஜண்டா பிரதியை வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் ஒன்றியக்குழு தலைவர் கையெழுத்து வாங்குவதற்கு அலுவலக ஊழியர் ஒருவரிடம் கொடுத்து அதிகாரிஅனுப்பி வைத்துள்ளார்.
அப்போது ஒன்றியக்குழு தலைவர் மாடியில் இருந்ததால் அவரை சந்தித்து கையெழுத்து வாங்குவது சம்மந்தமாக அவரது மகன் ஒன்றிய செயலாளர் லோகேஷ்வரன் தனது தாயாரிடம் கையெழுத்து வாங்கிக் கொள்ளும்படி கூறி உள்ளார். அப்போது. அஜண்டா நகலை படித்து பார்த்த ஒன்றியக்குழு தலைவரின் மகன் 40 லட்சம் வரை ஏற்கனவே செய்த பணிகளுக்கான செலவினத்துக்கு ஒப்புதல் கோரி அதில் தீர்மானம் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக ஒன்றிய பொது நிதியில் உள்ள பணத்தை வைத்து வளர்ச்சித் திட்டப்பணிகளை எடுத்து செய்து அதன் மூலம் லாபம் பார்க்க நினைத்தவருக்கு ஏற்கனவே செலவு செய்ததற்கு ஒப்புதல் அளிக்கும் தீர்மானம் கொண்டு வந்தால் எப்படி? செய்ய வேண்டிய மற்ற திட்டப்பணிகள் தொடர்பாகவும் தீர்மானம் கொண்டு வாருங்கள் என கேட்டு பிடிஓ அலுவலக ஊழியரிடம் வாக்குவாதம் செய்தாராம். தொடர்ந்து போன் மூலமும் பிடிஓவிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம். முதல் கூட்டம் நடத்துவதற்கு முன்பாகவே பிடிஓவிற்கும், ஒன்றியக்குழு தலைவரின் மகனுக்கும் கசமுசா ஏற்பட்டதை பார்த்து பிடிஓ அலுவலகம் உள்ளுக்குள் சிரித்து மகிழ்கிறதாம்... தலைவர் அம்மா.. ஆனால் நிழல் தலைவராக அவரது மகன் செயல்படுவது குறித்து அந்த ஒன்றியமே விழுந்து விழுந்து சிரிக்கிறதாம்...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-05-2020

  24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 22-05-2020

  22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • Netaji_Subhash _Chandra_Bose_Airport In Kolkata Got Damaged_In_Amphan_Cyclone

  கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் ஆம்பான் புயலால் சேதமடைந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்