SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆஸ்திரேலியாவில் பகலிரவு டெஸ்ட் கோஹ்லியின் சவாலுக்கு பிசிசிஐ கிரீன் சிக்னல்

2020-02-17@ 17:51:44

மும்பை: கடந்த சில மாதங்களுக்கு முன் கொல்கத்தாவில் வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை பகலிரவு டெஸ்ட் போட்டியாக இந்தியா ஆடியது. இதையடுத்து ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி கேப்டன் டிம் பெய்ன், ஆஸ்திரேலியாவில் பகலிரவு டெஸ்ட் போட்டியில் பங்கேற்க முடியுமா? என விராட் கோஹ்லிக்கு சவால் விடுத்திருந்தார். இதற்கு இந்திய கேப்டன் விராட் கோஹ்லி, ‘நிச்சயம் உலகின் எந்த மைதானத்திலும் இந்திய அணி பகலிரவு டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும்’ என பதிலடி கொடுத்தார். சவால் நிறைவேறும் வகையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது. அப்போது, இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஒரு போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து, பிசிசிஐ அதிகாரிகள் கூறுைகயில், ‘ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது இந்திய அணி பகலிரவு டெஸ்ட் போட்டியில் நிச்சயம் பங்கேற்கும்’ என்றார். இதுவரை ஆஸ்திரேலிய அணி ஆறு பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று, ஆறு போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. இதனால் இந்தியா - ஆஸ்திரேலியா ஆடும் பகலிரவு டெஸ்ட் போட்டி ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை ஆப்கானிஸ்தான், அயர்லாந்து அணிகளைத் தவிர்த்து டெஸ்ட் போட்டிகளை ஆடும் அனைத்து கிரிக்கெட் வாரியங்களும் பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்