SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காஷ்மீரும் குளிர்காலமும்

2020-02-17@ 17:01:58

நன்றி குங்குமம் முத்தாரம்

காஷ்மீரில் பயணம்  செய்ய மிகச் சிறந்த காலம் குளிர்காலம் தான். இது 5 மாத சீசன் எனக்கூறப்பட்டாலும், டிசம்பர் 21-ம் தேதி முதல் ஜனவரி 31-ம் தேதி வரை மட்டுமே அதில் சிறந்த காலம்.  

*ஏரிகள், மரங்கள், வீடுகளின் உச்சிகள் பள்ளத்தாக்குகள் என எல்லாமே பனி கொட்டி ஜொலிக்கும்.

*உண்மையில் இந்தக் காலம் நமக்கு பிடித்த காலம், காஷ்மீரிகளுக்குப் பிடிக்காத காலம். காஷ்மீருக்குப் பல பொருட் கள் வெளியிலிருந்துதான் வரவேண்டும். ஆனால் வரவிடாமல் வழியெங்கும் பனி கொட்டி, பல நாட்கள் சாலைப் போக்கு வரத்தையே முடக்கிவிடும். லடாக்-காஷ்மீர்-ஜம்மு மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமே போயிருக்கும். ஏரிகள் உறைந்துவிடும். அத்தியாவசிய பொருட்களுக்குக்கூட பஞ்சம். 14.2 கிலோ எல்.பி.ஜி.சிலிண்டருக்கு கடும் தட்டுப்பாடு வந்து, அதில் 5 கிலோவை நிரப்பி சப்ளை செய்வர். அதனைப் பெறவே பெரும் கூட்டம் நிற்கும். ஆனால், சுற்றுலாப் பயணிகளுக்குக் கொண்டாட்டம். இது சமயம் அரைகுறை தண்ணீரில், தால் ஏரியில் படகில் பயணித்து ஒரு ரவுண்டு வருவது ஒரு த்ரில்.

*பிறகு  ஜெயின்காடே (Zeinkade) பாலம் உள்ள பகுதிக்குச் சென்று அங்கு இருபுறமும் மரத்தால் கட்டப்பட்ட வீடுகளைப் பார்க்கணும். இவற்றில் சில 4, 5 மாடிகளைக் கொண்டவை. ஒரு காலத்தில் பணக்காரர்களும், சில பண்டிட்டுகளும் வசித்தவை. இன்று கை விடப்பட்டவை. காஷ்மீரில் க்ரீன் டீ மிகவும் பிரபலம். அதனை தால் ஏரியை ஒட்டிய கடைகளில் குளிரை அனுபவித்தபடியே குடிக்கணும்.

*சுற்றுலா சென்றால், நீங்கள் நிச்சயம் பார்க்க வேண்டியது குல்மார்க். அங்கு விண்ணில் உலாவும், கண்டோலா கார் பயணம் தில்லானது. இது 9000 அடியில் துவங்கி, முதலில் 11000 அடியில் நிறுத்தி, பிறகு அதிகபட்சமாக கீழே பனிபடர்ந்த மலைகளையும், பீடபூமிகளையும், பள்ளத்தாக்குகளையும், சின்கார் மரங்கள் மீது பனி கொட்டிக்கிடப்பதையும் காணலாம். அடுத்து பகல்காம் சென்று, மட்டக்குதிரையில் ஏறி, காஷ்மீரின் மீதி அழகையும் ரசிக்கலாம். கட்டுமரத்தில் பயணிக்கலாம். துணிந்தால் பயமில்லை. ஆனால் த்ரில் நிச்சயம்.

தொகுப்பு: ராஜிராதா


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai

  கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

 • kurosiya

  கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

 • medition2020

  சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

 • in22222

  கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

 • india2020

  கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்