SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டெல்டா யுத்தம்

2020-02-17@ 00:02:38

தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி படுகைகளில் கடந்த சில ஆண்டுகளாக வேளாண்மை கேள்விக்குறியாக உள்ளது. ஒருபக்கம் கர்நாடகாவோடு தண்ணீருக்கு தர்மயுத்தம் நடத்த வேண்டியதிருக்கிறது. மறுபக்கம் சொந்த மண்ணுக்கே வந்து மீத்தேன் என மிரட்டும் தனியார் நிறுவனங்களை எதிர்கொள்ள வேண்டியதிருக்கிறது. காவிரி படுகையில் விவசாயம் பிழைக்குமா என்ற கேள்விக்குறி எல்லோருக்குமே இருக்கிறது. காவிரிப்படுகையை 2 மண்டலமாக பிரித்து அதில் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ஏற்கனவே முடிவு செய்துள்ளது. அதன்படி பிரிவு1ல், விழுப்புரம், புதுச்சேரியை சுற்றியுள்ள பகுதிகளில் 116 ஹைட்ரோ கார்பன் கிணறுகளும், பிரிவு 2ல் கடலூர் முதல் நாகை வரையுள்ள பகுதிகளில் 158 கிணறுகள் அமைக்கப்பட உள்ளன.

இத்திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளில் மத்திய அரசு இறங்கியபோது, பொதுமக்கள், விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு வலுத்தது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மீனவர்களும் தங்கள் வாழ்வாதாரம் கருதி போராட்டங்களை முன்னெடுத்தனர். போராட்டங்கள் காரணமாக ஹைட்ரோ கார்பன் திட்டப்பணிகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் மத்திய அரசு ஏற்கனவே தனியார் நிறுவனங்களுடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தம் அடிப்படையில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அந்த இடத்தை தாரை வார்க்கவே முயலும். இந்நிலையில் தமிழக அரசு காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கதே. ஆனால் இதில் உறுதியாக அரசு  நிற்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மத்திய அரசிடம் கெஞ்சி பார்த்தனர். பின்னர் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மத்திய அரசு அதை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. நீட் தேர்வு விவகாரம் கோர்ட்டுக்கு வந்தபோதுதான், சட்டசபை தீர்மானத்தின் நிலைப்பாடுகள் வெளியே தெரிந்தது. பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலைக்காக தமிழக அரசின் தீர்மானங்கள் இன்று வரையில் கேட்பாரற்று கிடக்கிறது. இந்த சூழலில் தமிழக முதல்வர் டெல்டா பகுதிகளை  ‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்’ எனக்கூறிக் கொண்டு மத்திய அரசுக்கு கடிதம் மட்டும் அனுப்புவதால் எவ்வித பிரயோஜனமும் இருக்க போவதில்லை. காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கும் தமிழக அரசின் நடவடிக்கைகள் சற்று காலதாமதமாகவே தொடங்கியுள்ளது.

காவிரி படுகைகளில் நிலம் கையெடுப்பு பணிகளில் வருவாய்துறையினர் இறங்கியபோதும், ஹைட்ரோ கார்பன் நிறுவனங்களுக்கு போலீசார் பாதுகாப்பு வழங்கியபோதும், தமிழக அரசு தர்மசங்கடமாக தவித்தது. சட்டசபை தேர்தலை அடுத்த ஓராண்டில் எதிர்கொள்ள வேண்டிய சூழலில், தமிழக அரசு  
தன் நிலையை மாற்றி, விவசாயிகளுக்கு கைகொடுக்க வேண்டும். டெல்டாவை பாதுகாப்பான வேளாண் மண்டலமாக அறிவித்ததுடன், நடைமுறை படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். எது எப்படியாயினும் டெல்டா யுத்தத்தில் விவசாயிகள் வெற்றி பெற்றாக வேண்டும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai

  கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

 • kurosiya

  கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

 • medition2020

  சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

 • in22222

  கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

 • india2020

  கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்