SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக 2வது நாளாக போராட்டம்

2020-02-15@ 07:36:19

சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டை, மண்ணடியில் இஸ்லாமியர்கள் 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வண்ணாரப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் மீது தடியடி நடத்தியதை கண்டித்து தர்ணா நடத்தினர். வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து போராடியவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியதைக் கண்டித்து இரவில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நேற்று முஸ்லிம்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது போலீசார் திடீரென தடியடி நடத்தினர். இதனால் ஏற்பட்ட தள்ளுமுள்ளு, நெரிசலில் சிக்கி ஒருவர் இறந்ததாக கூறப்படுகிறது.இதைத்தொடர்ந்து அப் பகுதியில்  பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். போலீஸ் தடியடியை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்தது.  குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி முஸ்லிம்கள் மற்றும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 28-02-2020

    28-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • kalavaram2020

    டெல்லி கலவரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34ஆக உயர்வு: நேசித்தவர்களின் இழப்பை நினைத்து குடும்பங்கள் கதறல்

  • flight2020

    கொரோனா வைரஸ் பாதிப்பு: 18 டன் மருந்து பொருட்களுடன் இந்திய ராணுவ விமானம் சீனா சென்றது

  • keeladi20

    தோண்ட தோண்ட கீழடியில் அதிசயம்: 6-ம் கட்ட அகழாய்வில் முதுமக்கள் தாழி போன்ற அமைப்பு கண்டுபிடிப்பு

  • raajeshaathan20

    ராஜஸ்தானில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்து: 25 பேர் பலி...பலர் கவலைக்கிடம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்