SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போதைப்பொருள் விற்ற இலங்கை தமிழர்கள் 4 பேர் கைது

2020-02-15@ 06:39:00

சென்னை: வளசரவாக்கம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு போலீசார்  ரோந்து சென்ற போது 4 பேர் ஒரு பையுடன் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றி திரிந்தனர். அவர்களை பிடித்து விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதனால், அவர்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது, பல கோடி ரூபாய் மதிப்புள்ள ‘மெத்தம் பெட்டனமன்’ என்ற போதை பொருளை பச்சை நிற துணியில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவர்கள் இலங்கையை சேர்ந்த சிவரூபன் பரமானந்தம் (45), அலெக்சாண்டர் பாலிகேப் (36) மற்றும் புழல் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த கோபால் மணி (38), சுஜந்தன் சொக்கலிங்கம் (39) ஆகியோர் என தெரியவந்தது.

பரமானந்தம் மற்றும் அலெக்சாண்டர் பாலிகேப் ஆகியோர் இலங்கையில் இருந்து போதைப்பொருளை சென்னைக்கு கடத்தி வந்து, இலங்கை அகதிகள் முகாமில் உள்ள தனது நண்பர்களான கோபால் மணி, சுஜந்தன் சொக்கல்லிங்கத்தின் உதவியுடன் சென்னை முழுவதும் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்தது  தெரியவந்தது. அதைதொடர்ந்து போதை தடுப்பு பிரிவு போலீசார் 4 இலங்கை தமிழர்களையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பல கோடி மதிப்புள்ள 5 கிலோ போதை பொருள் பறிமுதல் செய்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 28-02-2020

    28-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • kalavaram2020

    டெல்லி கலவரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34ஆக உயர்வு: நேசித்தவர்களின் இழப்பை நினைத்து குடும்பங்கள் கதறல்

  • flight2020

    கொரோனா வைரஸ் பாதிப்பு: 18 டன் மருந்து பொருட்களுடன் இந்திய ராணுவ விமானம் சீனா சென்றது

  • keeladi20

    தோண்ட தோண்ட கீழடியில் அதிசயம்: 6-ம் கட்ட அகழாய்வில் முதுமக்கள் தாழி போன்ற அமைப்பு கண்டுபிடிப்பு

  • raajeshaathan20

    ராஜஸ்தானில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்து: 25 பேர் பலி...பலர் கவலைக்கிடம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்