SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வீட்டு முன் விளையாடியபோது கழிவுநீர் தொட்டியில் விழுந்து 5 வயது சிறுவன் பரிதாப பலி

2020-02-15@ 06:37:42

ஆவடி: ஆவடியில் வீட்டின் முன் விளையாடியபோது மாயமான சிறுவன் நேற்று கழிவுநீர் தொட்டியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டான். ஆவடி காந்திநகர், அன்பழகன் தெருவை சேர்ந்தவர் காந்தி (39). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி வள்ளி (30). இவர்களது மகள் யசோதா (8). மகன்கள் சுவேகன் (5), சுமுகன் (5). இருவரும் இரட்டையர்கள். யசோதா 3ம் வகுப்பு மாணவி. சுவேகன், சுமுகன் இருவரும் 1ம் வகுப்பு மாணவர்கள்.
நேற்று மாலை காந்தி தனது ஆட்டோவில் மகள், மகன்களை அழைத்து கொண்டு வீட்டுக்கு வந்தார். பின்னர், அவர் சவாரிக்காக வீட்டிலிருந்து வெளியே சென்று விட்டார். இதன் பிறகு வீட்டுக்கு வெளியே தெருவில் சக சிறுவர்களுடன்  சுமுகன் விளையாடி கொண்டிருந்தான். பின்னர், சிறிது நேரத்தில் திடீரென சுமுகன் மாயமானான். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடி பார்த்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து ஆவடி காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் செய்தனர். இதனை தொடர்ந்து ஆவடி போலீஸ் உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி, இன்ஸ்பெக்டர் காளிராஜ் ஆகியோர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது காந்தி வசிக்கும் வீட்டின் பின்புறம் போலீசார் சென்று பார்த்தபோது 8 அடி ஆழம் கொண்ட கழிவுநீர் தொட்டி திறந்த நிலையில் இருப்பது தெரிந்தது. எனவே கழிவுநீர் தொட்டியில் சிறுவன் தவறி விழுந்து இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து கழிவுநீர் தொட்டிக்குள் இரும்பு கம்பியால் போலீசார் தேடியபோது சிறுவனின் சடலம் சிக்கியது. உடனே போலீசார் கழிவுநீர் தொட்டியில் இறங்கி சுமுகன்  உடலை வெளியே கொண்டு வந்தனர். இரட்டை மகன்களில் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டதை பார்த்த பெற்றோர் கட்டி பிடித்து கதறி அழுதனர். பின்னர்,  போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் ஆவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 28-02-2020

    28-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • kalavaram2020

    டெல்லி கலவரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34ஆக உயர்வு: நேசித்தவர்களின் இழப்பை நினைத்து குடும்பங்கள் கதறல்

  • flight2020

    கொரோனா வைரஸ் பாதிப்பு: 18 டன் மருந்து பொருட்களுடன் இந்திய ராணுவ விமானம் சீனா சென்றது

  • keeladi20

    தோண்ட தோண்ட கீழடியில் அதிசயம்: 6-ம் கட்ட அகழாய்வில் முதுமக்கள் தாழி போன்ற அமைப்பு கண்டுபிடிப்பு

  • raajeshaathan20

    ராஜஸ்தானில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்து: 25 பேர் பலி...பலர் கவலைக்கிடம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்