SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குடியுரிமை சட்டத்தை கண்டித்து முதல்வர் செல்லும் பாதையில் மறியல்

2020-02-15@ 06:31:36

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி ேநற்று மதியம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டிற்கு தலைமை செயலகத்தில் இருந்து புறப்பட்டு சென்றார். அப்போது சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் நினைவு மண்டபம் அருகே காயத்திரி, ராதிகா உட்பட 5 பெண்கள் திடீரென ‘இந்தியாவை காதலிப்போம்’ என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை கையில் வைத்துக்கொண்டு முதல்வர் செல்லும் பாதையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். முதல்வர் செல்லும் பாதை என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இருந்தாலும் போலீசாரின் பாதுகாப்பை மீறி மறியல் போராட்டம் நடந்தது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்களையும் கைது செய்ய முயன்றனர். அப்போது போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அனைவரையும் போலீசார் கைது செய்து, மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 28-02-2020

    28-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • kalavaram2020

    டெல்லி கலவரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34ஆக உயர்வு: நேசித்தவர்களின் இழப்பை நினைத்து குடும்பங்கள் கதறல்

  • flight2020

    கொரோனா வைரஸ் பாதிப்பு: 18 டன் மருந்து பொருட்களுடன் இந்திய ராணுவ விமானம் சீனா சென்றது

  • keeladi20

    தோண்ட தோண்ட கீழடியில் அதிசயம்: 6-ம் கட்ட அகழாய்வில் முதுமக்கள் தாழி போன்ற அமைப்பு கண்டுபிடிப்பு

  • raajeshaathan20

    ராஜஸ்தானில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்து: 25 பேர் பலி...பலர் கவலைக்கிடம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்