SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆன்லைனில் பொருள் விற்பதாக க்யூஆர் குறியீடு மூலம் 20 பேரின் வங்கி கணக்கில் பல லட்சம் பணம் மோசடி : சைபர் க்ரைம் போலீசார் தீவிர விசாரணை

2020-02-15@ 06:27:13

சென்னை: ஆன்லைனில் வசீகரமான பொருட்களை விற்பனை செய்வதாக விளம்பரம் செய்து, க்யூஆர் குறியீடு மூலம் சென்னையில் 20க்கும் மேற்பட்டோரின் வங்கிக்கணக்கில் பல லட்சம் பணத்தை மோசடி செய்த கும்பலை சைபர் க்ரைம் போலீசார் தேடி வருகின்றனர். பொதுமக்கள் தங்கள் வீட்டிற்கு தேவையான பொருட்கள் மற்றும் உணவுகளை தற்போது ஆன்லைன் மூலம் பதிவு செய்து பெற்றுக்கொள்கின்றனர். இதற்காக பல ஆன்லைன் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல சிறப்பு சலுகைகளை அறிவித்து வருகிறது. ஆன்லைனில் தற்போது பழைய பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. இதை ஆன்லைன் மோசடி நபர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பொருட்களை ஆன்லைனில் வாங்கும் பொதுமக்களிடம் பேசி க்யூஆர் குறியீடு அனுப்பி அதில் இருந்து பணத்தை மோசடி செய்து வருகின்றனர். அந்த வகையில், சென்னையில் கடந்த 10 நாட்களில் க்யூ ஆர் குறியீடு மூலம் பல லட்சம் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர சைபர் க்ரைம் போலீசாருக்கு 20க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன.

குறிப்பாக, கடந்த மாதம் ஆன்லைனில் திருவான்மியூரை சேர்ந்த மென்பொருள் இன்ஜினியர் என்ற பெயரில் ஒருவர் தனது துணி துவைக்கும் இயந்திரத்தை விற்பனை செய்வதாக பதிவு செய்துள்ளார். 45 ஆயிரம் மதிப்புள்ள இயந்திரம் 16 ஆயிரம் என்று அறிவித்திருந்தார். அதை நம்பிய சுந்தர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அதை ஆன்லைனில் பதிவு செய்த இன்ஜினியரை தொடர்பு கொண்டு துணி துவைக்கும் இயந்திரத்தை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளார். அதன்படி இயந்திரத்தை விற்பனை செய்யும் இன்ஜினியர் உங்கள் வாட்ஸ் அப்பில் இயந்திரத்திற்கான க்யூ ஆர் குறியீடு அனுப்புகிறேன் அதை நீங்கள் ஸ்கேன் செய்தால் போதும் உங்கள் வீட்டிற்கு நான் இயந்திரத்தை அனுப்பிவிடுகிறேன் என்று கூறியுள்ளார். அதன்படி இயந்திரத்தை விற்பனை செய்யும் இன்ஜினியர் பொருட்கள் வாங்கும் சுந்தரின் வாட்ஸ் அப் எண்ணிற்கு க்யூ ஆர் குறியீடு அனுப்பினார். அந்த குறியீட்டை செல்போனில் ஸ்கேன் செய்ததும் அடுத்த சிறிது நேரத்தில் செல்போனில் உள்ள தகவல்கள் ேஹக் செய்யப்பட்டு அவரது வங்கி கணக்கில் இருந்து 30 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. அதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொருட்கள் வாங்கும் சுந்தர், குறியீடு அனுப்பிய இன்ஜினியரை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன் பிறகு தான் ஏமாற்றப்பட்டது அவருக்கு தெரிந்தது.

இதுபோல் சென்னையில் மோசடி நபர்கள் குழுவாக சேர்ந்து ஆன்லைனில் பழைய  பொருட்கள் விற்பனை செய்வதாக விளம்பரம் செய்து அந்த  பொருளுக்கான க்யூ ஆர் குறியீடு போலியாக உருவாக்கி அதன் மூலம் பொதுமக்களிடம் இருந்து பல லட்சம் பணத்தை மோசடி செய்து வருகின்றனர்.
இந்த மோசடி கும்பலை பிடிக்க சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.ேக.விஸ்வநாதன் உத்தரவுப்பு மத்திய குற்றப்பிரிவின் சைபர் க்ரைம் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த வகை மோசடிகள் வளர்ந்து நாடுகளில்தான் அதிகளவில் நடந்து வருகிறது. தற்போது சென்னையில் 20க்கும் மேற்பட்டோரிடம் க்யூஆர் குறியீடு மூலம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்கும் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 28-02-2020

  28-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • kalavaram2020

  டெல்லி கலவரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34ஆக உயர்வு: நேசித்தவர்களின் இழப்பை நினைத்து குடும்பங்கள் கதறல்

 • flight2020

  கொரோனா வைரஸ் பாதிப்பு: 18 டன் மருந்து பொருட்களுடன் இந்திய ராணுவ விமானம் சீனா சென்றது

 • keeladi20

  தோண்ட தோண்ட கீழடியில் அதிசயம்: 6-ம் கட்ட அகழாய்வில் முதுமக்கள் தாழி போன்ற அமைப்பு கண்டுபிடிப்பு

 • raajeshaathan20

  ராஜஸ்தானில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்து: 25 பேர் பலி...பலர் கவலைக்கிடம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்