SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சொத்து வரி செலுத்தாததால் 2வது முறையாக வணிக வளாகம் முன்பு குப்பை லாரி நிறுத்தம் : மாநகராட்சி நடவடிக்கை

2020-02-15@ 06:25:07

பெரம்பூர் :   பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் ஸ்பெக்ட்ரம் மால் எனும் தனியாருக்கு சொந்தமான ஷாப்பிங் மால் மற்றும் கடைகள் திரையரங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த வணிக வளாகம் மற்றும் திரையரங்கத்தின் உரிமையாளர்கள் மாநகராட்சிக்கு 1.5 கோடிக்கு அதிகமாக சொத்து வரி செலுத்தவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால், கடந்த மாதம் 29ம் தேதி மாநகராட்சி அதிகாரிகள் இந்த வணிக வளாகம் முன்பு குப்பை லாரிகளை நிறுத்தி, வரி பாக்கியை செலுத்தும்படி எச்சரித்தனர். மேலும், வணிக வளாகம் முன்பு நோட்டீஸ் ஒட்டினர் அதுமட்டுமின்றி, சொத்து வரி கட்டவில்லை என்றால் வணிக வளாகத்திற்கு சீல்  வைப்போம் என எச்சரித்தனர். அதன்பின்பு அந்த வணிக வளாகம் சார்பில் 1 கோடி வரை சொத்து வரி செலுத்தப்பட்டது. மீதமுள்ள தொகையை விரைவில் செலுத்துவதாக உறுதியளித்தனர். ஆனால், அதன்படி செலுத்தவில்லை, என கூறப்படுகிறது. இந்நிலையில், மாநகராட்சி 6வது மண்டல அதிகாரி நாராயணன் உத்தரவின் பேரில் உதவி வருவாய் அலுவலர் லட்சுமண குமார் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் அந்த வணிக வளாகம் முன்பு நேற்று 2வது முறையாக குப்பை லாரிகளை நிறுத்தி அந்த வணிக வளாகத்திற்குள் யாரும் செல்ல முடியாத அளவிற்கு பாதையை மூடினர்.

மேலும் சீல் வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதுகுறித்து உடனடியாக வணிக வளாகத்தின் உரிமையாளர்கள் மண்டல உயர் அதிகாரியிடம் பேசி, இன்னும் ஒரு வாரத்தில் மீதமுள்ள சொத்து வரியை காட்டுவதாக கூறினர். சுமார் 3 மணி நேரத்திற்குப் பின்பு அங்கு இருந்த கடைகள் அகற்றப்பட்டு மாநகராட்சி அதிகாரிகள் கலைந்து சென்றனர். இன்னும் ரூ.66 லட்சம் பாக்கி வைத்துள்ளதாகவும் ஒரு வாரத்திற்குள் இந்த நிலுவை தொகையை கட்டவில்லை என்றால் கண்டிப்பாக இந்த வணிக வளாகத்திற்கு சீல் வைக்கப்படும் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு  ஏற்பட்டது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 28-02-2020

    28-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • kalavaram2020

    டெல்லி கலவரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34ஆக உயர்வு: நேசித்தவர்களின் இழப்பை நினைத்து குடும்பங்கள் கதறல்

  • flight2020

    கொரோனா வைரஸ் பாதிப்பு: 18 டன் மருந்து பொருட்களுடன் இந்திய ராணுவ விமானம் சீனா சென்றது

  • keeladi20

    தோண்ட தோண்ட கீழடியில் அதிசயம்: 6-ம் கட்ட அகழாய்வில் முதுமக்கள் தாழி போன்ற அமைப்பு கண்டுபிடிப்பு

  • raajeshaathan20

    ராஜஸ்தானில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்து: 25 பேர் பலி...பலர் கவலைக்கிடம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்