SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மூதாட்டியை தாக்கி 4 சவரன் பறிப்பு

2020-02-15@ 06:24:16

தண்டையார்பேட்டை: பாரிமுனை அடுத்த ஏழுகிணறு பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (75). இவர், நேற்று முன்தினம் காலை கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியே வந்த பெண், வெயில் அதிகமாக உள்ளது, நிழலில் நடந்து செல்லுங்கள் என லட்சுமியிடம் கூறியுள்ளார். பின்னர், அவரிடம் பேச்சு கொடுத்தபடி உடன் நடந்து சென்றுள்ளார். ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சென்றபோது, திடீரென லட்சுமியை சரமாரியாக தாக்கய அந்த பெண், அவர் கழுத்தில் கிடந்த 4 பவுன் செயினை பறித்துள்ளார். லட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அந்த பெண்ணை மடக்கி பிடித்து ஏழுகிணறு போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், புழல் காவாங்கரை பகுதியை சேர்ந்த பரிதாபீவி (44) என்பதும், தனியாக செல்லும் மூதாட்டிகளை தாக்கி செயின் பறித்து வந்ததும் தெரியவந்தது. அவரிடமிருந்து செயினை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் புழல்சிறையில் அடைத்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 28-02-2020

    28-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • kalavaram2020

    டெல்லி கலவரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34ஆக உயர்வு: நேசித்தவர்களின் இழப்பை நினைத்து குடும்பங்கள் கதறல்

  • flight2020

    கொரோனா வைரஸ் பாதிப்பு: 18 டன் மருந்து பொருட்களுடன் இந்திய ராணுவ விமானம் சீனா சென்றது

  • keeladi20

    தோண்ட தோண்ட கீழடியில் அதிசயம்: 6-ம் கட்ட அகழாய்வில் முதுமக்கள் தாழி போன்ற அமைப்பு கண்டுபிடிப்பு

  • raajeshaathan20

    ராஜஸ்தானில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்து: 25 பேர் பலி...பலர் கவலைக்கிடம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்