SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விமானம் மூலம் இலங்கைக்கு ஹெராயின் கடத்தியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

2020-02-15@ 06:23:40

சென்னை :  சென்னை ராயப்பேட்டை ஜானி ஜான்கான் ரோட்டை சேர்ந்தவர் முனவர் பாஷா (37). இவர் கடந்த 30.3.2017 அன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து, இலங்கைக்கு விமானம் மூலம் ஹெராயின் போதைப்பொருள் கடத்துவதாக, போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அதிகாரிகள், சென்னை விமான நிலையத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது, முனவர் பாஷா விமானத்தில் புறப்பட உள்ளே சென்றார். அதிகாரிகள் விரைந்து சென்று அவரை தடுத்து நிறுத்தி, சோதனை நடத்தினர். அப்போது, அவரது பெட்டியில் 800 கிராம் ஹெராயின் போதைப்பொருள் வைத்திருந்தது உறுதி செய்யப்பட்டது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், போதைப் பொருள் தடுப்பு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு சென்னையில் உள்ள போதைப் பொருள் தடுப்புபிரிவு நீதிமன்றத்தில் நீதிபதி தேன்மொழி முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வக்கீல் செல்லதுரை ஆஜராகி வாதிட்டார். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் முனவர் பாஷா வெளிநாட்டுக்கு போதைப்பொருள் கடத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ₹2 லட்சம் அபரதமும் விதிக்கப்படுகிறது என்று கூறி உத்தரவிட்டார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 28-02-2020

    28-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • kalavaram2020

    டெல்லி கலவரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34ஆக உயர்வு: நேசித்தவர்களின் இழப்பை நினைத்து குடும்பங்கள் கதறல்

  • flight2020

    கொரோனா வைரஸ் பாதிப்பு: 18 டன் மருந்து பொருட்களுடன் இந்திய ராணுவ விமானம் சீனா சென்றது

  • keeladi20

    தோண்ட தோண்ட கீழடியில் அதிசயம்: 6-ம் கட்ட அகழாய்வில் முதுமக்கள் தாழி போன்ற அமைப்பு கண்டுபிடிப்பு

  • raajeshaathan20

    ராஜஸ்தானில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்து: 25 பேர் பலி...பலர் கவலைக்கிடம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்