SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட 86 லட்சம் தங்க கட்டிகள் பறிமுதல்

2020-02-15@ 06:04:50

சென்னை: சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட சோதனையில் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட ₹86 லட்சம் மதிப்புடைய 2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. துபாயில்  இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு எமரேட்ஸ் விமானம் நேற்று அதிகாலை 3 மணிக்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்த சேகர் குண்டாலா (52) என்பவர் சுற்றுலா பயணியாக துபாய் சென்று, திரும்பி வந்தார். அவரது உடமைகளில் எதுவும் இல்லை. ஆனாலும், சந்தேகம் தீராத அதிகாரிகள் அவரை தனி அறைக்கு அழைத்து சென்று ஆடைகளை களைந்து சோதனையிட்டனர். அவர் அணிந்திருந்த பெல்ட் மற்றும் அதன் வளையங்கள் தங்கத்தால் செய்திருந்ததை கண்டு பிடித்தனர். இதன் எடை 240 கிராம். மதிப்பு 10 லட்சம். அவரை கைது செய்து தங்க பெல்ட்டை பறிமுதல் செய்தனர்.

அதேபோல் அதிகாலை 3.30 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சென்னை விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை அதிகாரிகள் சோதித்தபோது, ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது சாகிப் (29) என்பவரை சோதனையிட்டபோது, அவருடைய பேண்ட் பெல்ட் லூப் ஹோலில் 270 கிராம் தங்கத்தை மறைத்து வைத்திருப்பது தெரிந்தது. அவற்றை கைபற்றினர். இதன் மதிப்பு 11.23 லட்சம். இதையடுத்து அவரையும் கைது செய்தனர். தொடர்ந்து, இலங்கையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று காலை 8.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த சையத் அன்சாரி (27), அமீது இப்ராகிம் (21),  அகமது பஷீர் (34) மற்றும் சென்னையை சேர்ந்த மஸ்தான் கனி (26) ஆகிய 4 பேர் ஒரு குழுவாக சுற்றுலா பயணியாக இலங்கை சென்று, சென்னை திரும்பி வந்தனர்.

 சந்தேகத்தின் பேரில், அவர்களை தனி அறைக்கு அழைத்து சென்று சோதித்தபோது அவர்களது உள்ளாடைக்குள் தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டு பிடித்தனர். இவர்கள் 4 பேரிடம் இருந்து 1.417 கிலோ தங்கம் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 59.64 லட்சம். இதையடுத்து 4 பேரையும் கைது செய்தனர். காலை 8 மணி அளவில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் வருகை பகுதியில் வைக்கப்பட்டிருந்த அலங்கார பூந்தொட்டிகளை விமான நிலைய ஊழியர் ஒருவர் சுத்தம் செய்தார். அப்போது   பூந்தொட்டிக்குள் பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றி வைக்கப்பட்டிருந்த தங்க கட்டி ஒன்று இருந்ததை பார்த்தார். அதனை சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். இந்த தங்கத்தின் எடை 117 கிராம். இதன் மதிப்பு 5 லட்சம்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 28-02-2020

    28-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • kalavaram2020

    டெல்லி கலவரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34ஆக உயர்வு: நேசித்தவர்களின் இழப்பை நினைத்து குடும்பங்கள் கதறல்

  • flight2020

    கொரோனா வைரஸ் பாதிப்பு: 18 டன் மருந்து பொருட்களுடன் இந்திய ராணுவ விமானம் சீனா சென்றது

  • keeladi20

    தோண்ட தோண்ட கீழடியில் அதிசயம்: 6-ம் கட்ட அகழாய்வில் முதுமக்கள் தாழி போன்ற அமைப்பு கண்டுபிடிப்பு

  • raajeshaathan20

    ராஜஸ்தானில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்து: 25 பேர் பலி...பலர் கவலைக்கிடம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்