SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சட்டத்தின் ஓட்டையில் நுழைந்து விளையாடும் மரண தண்டனை கைதிகளுக்கு ஆப்பு வைத்தது உச்ச நீதிமன்றம்: விதிமுறை வெளியிட்டது

2020-02-15@ 02:06:04

புதுடெல்லி: ‘உயர் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் மேல் முறையீட்டு மனுக்களை, தீர்ப்பு வெளியான 6 மாதத்துக்குள் விசாரிக்க வேண்டும்,’ என உச்ச நீதிமன்றம் விதிமுறை வெளியிட்டுள்ளது.  நிர்பயா வழக்கில் மரண தண்டனை பெற்ற குற்றவாளிகள், மரண தண்டனை தேதி அறிவிக்கப்பட்ட பின்பு ஒவ்வொருவராக மேல்முறையீடு மனு, கருணை மனு, சீராய்வு மனுக்கள் என தாக்கல் செய்து, சட்டத்தின் ஓட்டையில் நுழைந்து விளையாடி வருவதால் அவர்களுக்கான தண்டனை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இது பொதுமக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், மரண தண்டனை பெற்ற குற்றவாளிகள், மேல் முறையீட்டு மனுக்களை 6 மாதத்துக்குள் விசாரிக்க வேண்டும் என  கெடு விதித்து உச்ச நீதிமன்றம் நேற்று புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.  

இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடந்த 12ம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையில், ‘மரண தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தவுடன், மேல் மறையீட்டு மனுக்களை தாக்கல் உச்ச நீதிமன்றம் அனுமதிக்கிறது.  இந்த மேல் முறையீட்டு மனுக்கள் தயாராக இருந்தாலும், இல்லை என்றாலும், 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் 6 மாத காலத்துக்குள் விசாரிக்கப்பட வேண்டும்.  மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டதும், அது குறித்த தகவலை பதிவாளர் அலுவலகம் நீதிமன்றத்துக்கு தெரிவித்து 60 நாட்களுக்குள் ஒரிஜினல் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும். மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் அனுமதித்ததும், கூடுதல் ஆவணங்களை 30 நாட்களுக்குள் தாக்கல் செய்ய மனுதாரர்களை பதிவாளர் அலுவலகம் வலியுறுத்த வேண்டும்.
கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யப்படவில்லை என்றாலும், இந்த மனுக்கள் விசாரணைக்கு பட்டியலிடப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 28-02-2020

    28-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • kalavaram2020

    டெல்லி கலவரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34ஆக உயர்வு: நேசித்தவர்களின் இழப்பை நினைத்து குடும்பங்கள் கதறல்

  • flight2020

    கொரோனா வைரஸ் பாதிப்பு: 18 டன் மருந்து பொருட்களுடன் இந்திய ராணுவ விமானம் சீனா சென்றது

  • keeladi20

    தோண்ட தோண்ட கீழடியில் அதிசயம்: 6-ம் கட்ட அகழாய்வில் முதுமக்கள் தாழி போன்ற அமைப்பு கண்டுபிடிப்பு

  • raajeshaathan20

    ராஜஸ்தானில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்து: 25 பேர் பலி...பலர் கவலைக்கிடம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்