SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜம்மு காஷ்மீரில் எல்லை கிராமங்கள் மீது பாகிஸ்தான் குண்டுவீச்சு: ஒருவர் பலி, 4 பேர் காயம்

2020-02-15@ 02:05:09

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே உள்ள கிராமங்களின் மீது பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குலில் ஒருவர் கொல்லப்பட்டார். 4 பேர் காயமடைந்தனர். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில், ஷாபூர் மற்றும் கெர்னி எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று திடீர் தாக்குதல் நடத்தினார்கள். ராணுவ நிலைகள், கிராமங்களை  குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இயந்திர துப்பாக்கியால் சுட்டும், சிறிய ரக குண்டுகளையு–்ம் வீசி இந்த தாக்குதல் நடத்தப்பட்டதில் ஒருவர் கொல்லப்பட்டார்.  மேலும், கிராமத்தை சேர்ந்த 4 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த இந்திய ராணுவ வீரர்களும், பாகிஸ்தான் வீரர்களின் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுத்தனர்.

இதனிடையே, ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளை தப்ப வைக்க முயன்றபோது போலீசாரின் பிடியில் சிக்கிய டிஎஸ்பி தேவேந்தர் சிங், சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக எல்லைக் கட்டுப்பாடு கோடு வர்த்தக அமைப்பின் தலைவர் தன்வீர் அகமது வானியை தேசிய புலனாய்வு அமைப்பு நேற்று கைது செய்தது. இவர், தேசிய புலனாய்வு அமைப்பின் தலைமை அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டு, ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பை சேர்ந்த சையத் நவீத் முஸ்தாக் அகமது உள்ளிட்ட தீவிரவாதிகளுக்கு நிதியுதவி செய்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. விசாரணையின் முடிவில் அவர் கைது செய்யப்பட்டார். தன்வீர் அகமது கைதை தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு டிஎஸ்பி உதவிய வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 28-02-2020

    28-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • kalavaram2020

    டெல்லி கலவரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34ஆக உயர்வு: நேசித்தவர்களின் இழப்பை நினைத்து குடும்பங்கள் கதறல்

  • flight2020

    கொரோனா வைரஸ் பாதிப்பு: 18 டன் மருந்து பொருட்களுடன் இந்திய ராணுவ விமானம் சீனா சென்றது

  • keeladi20

    தோண்ட தோண்ட கீழடியில் அதிசயம்: 6-ம் கட்ட அகழாய்வில் முதுமக்கள் தாழி போன்ற அமைப்பு கண்டுபிடிப்பு

  • raajeshaathan20

    ராஜஸ்தானில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்து: 25 பேர் பலி...பலர் கவலைக்கிடம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்