SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழக பட்ஜெட்டில் நெல்லுக்கு விலை உயர்வு இடம் பெறாதது ஏமாற்றம்: பி.ஆர்.பாண்டியன் பேட்டி

2020-02-15@ 02:04:19

மன்னார்குடி: தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் மன்னார்குடியில் அளித்த பேட்டி:  தமிழ்நாட்டில் 2021ல் சட்டமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் 10 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி செய்து வரும் அதிமுக தலைமையிலான தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையை மிகுந்த எதிர் பார்ப்போடு விவசாயிகள் காத்திருந்தோம். குறிப்பாக நெல் குவிண்டாலுக்கு மத்திய அரசின் விலையோடு ஊக்கத் தொகை சேர்த்து 2500 விலை, கூட்டுறவு மற்றும் வணிக வங்கிகளில் பெற்றுள்ள கடனில் தலா 2 லட்சம் வரை தள்ளுபடி உள்ளிட்ட அறிவிப்புகள் இடம் பெறாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. காவிரி-குண்டாறு இணைப்பு உள்ளிட்ட நதிநீர் இணைப்பு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது வரவேற்கத்தக்கது. காவிரி டெல்டா பாதுகாப்பு மண்டலம் சட்டம் நிறைவேற்றுவதற்கான உத்திரவாதம் இடம் பெறாதது குறித்து தெளிவுப்படுத்த வேண்டும். காவிரி டெல்டாவில் தூர்வாருவதற்கு 70 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது யானை பசிக்கு சோளப்பொறி போன்றது. மேலும் தூர் வாருவதற்கென தனி நிரந்தர அரசாணை வெளியிட வேண்டும்.  இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 28-02-2020

    28-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • kalavaram2020

    டெல்லி கலவரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34ஆக உயர்வு: நேசித்தவர்களின் இழப்பை நினைத்து குடும்பங்கள் கதறல்

  • flight2020

    கொரோனா வைரஸ் பாதிப்பு: 18 டன் மருந்து பொருட்களுடன் இந்திய ராணுவ விமானம் சீனா சென்றது

  • keeladi20

    தோண்ட தோண்ட கீழடியில் அதிசயம்: 6-ம் கட்ட அகழாய்வில் முதுமக்கள் தாழி போன்ற அமைப்பு கண்டுபிடிப்பு

  • raajeshaathan20

    ராஜஸ்தானில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்து: 25 பேர் பலி...பலர் கவலைக்கிடம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்