SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெரம்பலூரில் இருந்து 15 வயது சிறுமியை கடத்தி சென்னையில் 3 நாட்கள் அடைத்து வைத்து தொடர் பாலியல் பலாத்காரம் : போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

2020-02-15@ 00:33:45

சென்னை: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த 11ம் தேதி திடீரென வீட்டில் இருந்து மாயமானார். அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்க வில்லை. இதற்கிடையே அதே பகுதியை சேர்ந்த ஜெயகுமார்(23) என்ற வாலிபரும் மாயமாகி இருந்தார். இதனால் சந்தேகமடைந்த சிறுமியின் பெற்றோர் அரும்பாவூர் காவல் நிலையத்தில் ஜெயகுமார் தங்களது மகளை கடத்தியதாக புகார் அளித்தனர். அதன்படி போலீசார் ஜெயகுமார் செல்போன் சிக்னலை ைவத்து விசாரணை நடத்தினர். அப்போது, ஜெயகுமார் சென்னை அம்பத்தூர் பகுதியில் இருப்பதாக அவரது செல்போன் சிக்னல் காட்டியது. உடனே அரும்பாவூர் போலீசார் சம்பவம் குறித்து பெரம்பலூர் கண்காணிப்பாளர் உதவியுடன் சென்னை போலீஸ் கமிஷனருக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுப்படி அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கலா, அடையார் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் காமாட்சி, ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஞானசெல்வம் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் பாலசுப்பிரமணியன், தேவன், வானமாதேவி, அரும்பாவூர் காவல் நிலைய காவலர் விமலநாமன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் சென்னை மாங்காடு, போரூர், கோயம்பேடு, வடபழனி, அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் அம்பத்தூர் பகுதியில் ஒரு வீட்டில் சிறுமியுடன் பதுங்கி இருந்த ஜெயகுமாரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவனிடம் இருந்து 15 வயது சிறுமியை பத்திரமாக மீட்டனர். கைது செய்யப்பட்ட ஜெயகுமாரிடம் தனிப்படையினர் நடத்திய விசாரணையில், வீட்டில் அருகே உள்ள 15 வயது சிறுமியை ஒருதலையாக காதலித்து வந்ததாகவும், தனது காதலை சிறுமி ஏற்காதால் கடந்த 11ம் தேதி நண்பர்கள் உதவியுடன் சென்னைக்கு கடத்தி வந்து ஒரு வீட்டில் அடைத்து வைத்துள்ளதும் தெரியவந்தது. பின்னர் சிறுமியை திருமணம் செய்வதாக கூறி 3 நாட்களாக தொடர்ந்து பல முறை பாலியல் பலாத்காரம் செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட ஜெயகுமாரை தனிப்படை போலீசார் அரும்பாவூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதன்படி போலீசார் ஜெயகுமாரை நேற்று பெரம்பலூருக்கு அழைத்து சென்றனர். மீட்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 28-02-2020

    28-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • kalavaram2020

    டெல்லி கலவரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34ஆக உயர்வு: நேசித்தவர்களின் இழப்பை நினைத்து குடும்பங்கள் கதறல்

  • flight2020

    கொரோனா வைரஸ் பாதிப்பு: 18 டன் மருந்து பொருட்களுடன் இந்திய ராணுவ விமானம் சீனா சென்றது

  • keeladi20

    தோண்ட தோண்ட கீழடியில் அதிசயம்: 6-ம் கட்ட அகழாய்வில் முதுமக்கள் தாழி போன்ற அமைப்பு கண்டுபிடிப்பு

  • raajeshaathan20

    ராஜஸ்தானில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்து: 25 பேர் பலி...பலர் கவலைக்கிடம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்