SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டெல்லி முதல்வராக 3வது முறையாக பதிவியேற்கும் அரவிந்த் கெஜ்ரிவால்..: விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு

2020-02-14@ 16:59:19

டெல்லி: டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவாலின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. டெல்லி சட்டமன்ற தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. 70 தொகுதிகள் கொண்ட டெல்லியில், ஆளும் கட்சியாக இருந்த ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களை கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றது. தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகியவை பின்தங்கின. பாஜக 8 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தை கூட பிடிக்காமல் படுதோல்வி அடைந்தது. இந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக டெல்லியில் ஆட்சியமைக்க உள்ளார். அவரது பதவியேற்பு விழா டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் பிப்ரவரி 16ம் தேதியன்று நடைபெற உள்ளது.

அவரது பதவியேற்பு விழாவில் பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அரசியல் தலைவர்கள், பிற மாநில முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் டெல்லி முதல்வராக ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்கும் விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜரிவால் சார்பில், அழைப்புக் கடிதம் பிரமருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பதவியேற்பு விழாவில் பங்கேற்க குழந்தை மஃப்ளா்மேன் ஆவ்யன் தோமரை சிறப்பு அழைப்பாளராக ஆம் ஆத்மி கட்சி அழைப்பு விடுத்திருந்தது. கெஜ்ரிவால் போல தொப்பி, மப்ளர் அணிந்து, மீசை வரைந்து, சிறிய கண்ணாடி ஒன்றை அணிந்துகொண்டு அனைவரையும் கவர்ந்த அந்த குழந்தை பற்றிய வீடியோக்கள் ஊடகங்கள், சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 28-02-2020

    28-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • kalavaram2020

    டெல்லி கலவரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34ஆக உயர்வு: நேசித்தவர்களின் இழப்பை நினைத்து குடும்பங்கள் கதறல்

  • flight2020

    கொரோனா வைரஸ் பாதிப்பு: 18 டன் மருந்து பொருட்களுடன் இந்திய ராணுவ விமானம் சீனா சென்றது

  • keeladi20

    தோண்ட தோண்ட கீழடியில் அதிசயம்: 6-ம் கட்ட அகழாய்வில் முதுமக்கள் தாழி போன்ற அமைப்பு கண்டுபிடிப்பு

  • raajeshaathan20

    ராஜஸ்தானில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்து: 25 பேர் பலி...பலர் கவலைக்கிடம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்