SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு: மேலும் ஒரு விஏஓ கைது...இதுவரை 47 பேரை கைது செய்துள்ளது சிபிசிஐடி போலீஸ்

2020-02-14@ 07:55:19

சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் ஒருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். கைதான அமல்ராஜ் விழுப்புரம் அனந்தபுரம் அருகே உள்ள அந்தியூரில் விஏஓ-வாக பணியாற்றி வந்தார். குரூப் 4, குரூப் 2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக இதுவரை 47 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் குரூப் 4 பணி யிடங்களுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற எழுத்துத் தேர்வில் முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

டிஎன்பிஎஸ்சி வழக்கில் குரூப்4, குரூப்2ஏ, விஏஓ தேர்வுகளில் முறைகேடாக பணம் கொடுத்து தேர்வு எழுதிய நபர்கள் மற்றும் குரூப்2ஏ, விஏஓ தேர்வில் வெற்றி பெற்று பணியில் உள்ள நபர்கள் என மொத்தம் நேற்று முன்தினம் வரை 42 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளான டிஎன்பிஎஸ்சி ரெக்கார்ட் கிளாக் ஓம்காந்தனை கடந்த 6ம் தேதி முதல் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்த மோசடி வழக்கின் முக்கிய குற்றவாளியான இடைத்தரகர் ஜெயகுமாரின் 7 நாள் காவல் நேற்று முடிந்தது. இதற்கிடையே இடைத்தரகர் ஜெயகுமாரின் கார் டிரைவர் கார்த்திக் மற்றும் அவரது நண்பர் சம்பத் ஆகியோர் வழக்கறிஞர்களுடன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேற்று மாலை சரணடைந்தனர். குரூப் 4 விடைத்தாள் திருத்த பயன்படுத்திய ஓம்காந்தனின் 2 கார் மற்றும் ஜெயகுமாரின் 2 கார்கள் என 4 கார்கள் மற்றும் ரூ.2.75 லட்சம் பணத்தை சிபிசிஐடி போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்நிலையில் இன்று இதுதொடர்பாக மேலும் ஒரு விஏஓ கைது செய்யப்பட்டுள்ளார். கைதான அமல்ராஜ் விழுப்புரம் அனந்தபுரம் அருகே உள்ள அந்தியூரில் விஏஓ-வாக பணியாற்றி வந்தார். குரூப் 4, குரூப் 2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக இதுவரை 47 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 28-02-2020

    28-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • kalavaram2020

    டெல்லி கலவரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34ஆக உயர்வு: நேசித்தவர்களின் இழப்பை நினைத்து குடும்பங்கள் கதறல்

  • flight2020

    கொரோனா வைரஸ் பாதிப்பு: 18 டன் மருந்து பொருட்களுடன் இந்திய ராணுவ விமானம் சீனா சென்றது

  • keeladi20

    தோண்ட தோண்ட கீழடியில் அதிசயம்: 6-ம் கட்ட அகழாய்வில் முதுமக்கள் தாழி போன்ற அமைப்பு கண்டுபிடிப்பு

  • raajeshaathan20

    ராஜஸ்தானில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்து: 25 பேர் பலி...பலர் கவலைக்கிடம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்