SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கணும்னு திண்டிவனம்காரருக்கு பாடம் எடுத்த கோயம்பேடு கட்சியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2020-02-13@ 00:01:38

‘‘திண்டிவனத்துக்கும் கோயம்பேட்டுக்கும் என்ன பிரச்னை...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘பிரச்னை இருக்கட்டும். இரண்டு பேருமே ஆட்சியை தங்கள் கட்சி பிடிக்கும் என்று சொல்லி இருக்காங்க... ஆனால் இதுல கோயம்பேடுகாரர் மனைவி கூட்டணி கட்சிகள் எல்லாம் கூட்டணி தர்மத்தை கடைபிடிக்க வேண்டும் என்று யாரை சொன்னார் என்பதுதான் இப்போதைக்கு அரசியல் களத்தில் ஹாட் டாபிக். ஏன்னா பழைய சைக்கிள்காரர் பற்றி பிரச்னை இல்லை... கூட்டணியில் உள்ள ஒற்றை நபர் கட்சிகளும் அடக்கி வாசிக்கின்றன... ஆனால் திண்டிவனம்காரர் நாங்கள்தான் ஆட்சி அமைப்போம் என்று முதலில் கொளுத்தி போட்டார். அதன் தொடர்ச்சியாக தான் இப்போதைக்கு கோயம்பேடுகாரர் மனைவியும் எங்கள் கட்சியும் ஆட்சியை பிடிக்கும் என்று பேசினார். அடுத்த சில நிமிடத்தில் திண்டிவனம்காரர்போல பல்டி அடித்துவிட்டார்... இருந்தாலும் கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்துவதாக திண்டிவனம்காரரைத்தான் கோயம்பேடுகாரரின் மனைவி சொல்லி இருக்கிறார்.. அதற்கு திண்டிவனம் ரியாக்‌ஷன் என்ன வருது என்று பார்ப்போம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘குப்பையில காசு பார்த்து பாக்கெட்டை நிரப்பும் அதிகாரிகள் பற்றி சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் நகராட்சி 100 ஆண்டுகள் பழமையானது. இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் இருக்கு. பெரிய ஓட்டல்கள் 20, சிறிய ஓட்டல்கள் 100 மற்றும் டீக்கடைகள் 200 வரை உள்ளன. இந்த நகராட்சியில் சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் வரி, புதை வடிகால் வரி ஆகிய வரிகளுடன் சேர்த்து குப்பை வரியும் வாங்குறாங்க. குப்பை வரியில்தான் பெரிய வசூல் வேட்டையே நடக்குது... பெரிய ஓட்டல்களில் இருந்து இலைகளை அள்ளிச்செல்லும் ஊழியர்கள் ரூ.70க்கு ரசீது கொடுத்து விட்டு ரூ.100 முதல் ரூ.200 வரை வசூல் செய்றாங்களாம். சிறிய ஓட்டல்கள், டீக்கடைகளில் ரசீது வழங்காமலேயே பெரும் தொகையை வசூலிக்கிறாங்களாம். இந்த வசூல் பணம் எங்கு செல்கிறது என்பது புரியாமலும் யாரிடம் முறையிடுவது என்பது புரியாமலும் வியாபாரிகள் கடுப்பில் இருக்காங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கோவை கல்வித்துறையில் மர்மமா... அது என்ன மர்மம்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கோவை பள்ளி கல்வித்துறையில், கடந்த ஓராண்டில், மூன்று முதன்மை கல்வி அலுவலர்கள் மாறிட்டாங்க. இதனால கோவை மாவட்ட கல்வித்துறையில் யார் இப்போது சிஇஓ என்ற கேள்விக்கு பதில் சொல்வதற்குள் வேறு ஒரு சிஇஓ மாறிவிடும் நிலைதான் உள்ளதாம். இப்படி, அடிக்கடி சிஇஓ மாற்றத்துக்கு காரணம், கோவை மாவட்ட பள்ளி கல்வித்துறையில் உள்ள ஒரு பெண் டிஇஓதான் என சொல்லுறாங்க... இந்த அம்மாவுக்கு பெரிய பெரிய விவிஐபிக்களுடன் நெருக்கம் அதிகமாம். அதனால இந்த பெண் அதிகாரியை பகைத்துக்கொண்டால், யாரும் கோவையில் வேலை செய்ய முடியாதாம்.

அதனால்தான், தற்போதுகூட சிஇஓ மூன்றே மாதத்தில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். யாரா இருந்தாலும், எனக்கு புடிச்சாத்தான் இந்த மாவட்டத்துல சிஇஓவா பதவி வகிக்க முடியும் என தடாலடியாக கூறுகிறார் இந்த பெண் அதிகாரி. ஏற்கனவே இந்த பெண் அதிகாரி, அய்யனார் பெயர் கொண்ட ஒரு சிஇஓவை டிரான்ஸ்பர் செய்துள்ளார். இப்போ, புதுசா ஒரு பெண் அதிகாரி சிஇஓவாக நியமனம் செய்யப்பட்டு இருக்காங்க... ஆக, 2 பெண் அதிகாரிகள் கையில் கோவை மாவட்ட பள்ளி கல்வித்துறை சிக்கியிருக்கு... பிளஸ்1, 2 மற்றும் பத்தாம் வகுப்பு ரிசல்ட் வந்தால் தான் இவங்க லட்சணம் தெரியும் என்கின்றனர் கோவை ஆசிரியர்கள்....’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தஞ்சையில இலை கட்சி நிர்வாகிக்கு எதிராக அவரது கட்சியை சேர்ந்தவரே குடைச்சல் கொடுக்கிறாராமே. அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தஞ்சையில் ஆளும் கட்சி முக்கிய பிரமுகர் ஒருவர் ரூ.500 கோடிக்கு சொத்து சேர்த்து விட்டதாக அவரது கட்சிக்காரர்களே மாவட்டம் முழுவதும் துண்டு பிரசுரம் வெளியிட்டதோடு, அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்துறாங்க. அவரது கட்சிக்காரர்களே ஊழல் புகார் வெளியிட்டு இருந்த நிலையில், இலை கட்சியின் விவசாய பிரிவை சேர்ந்த ஒருவர் ஆளுங்கட்சி பிரமுகர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என தமிழக சட்டமன்ற செயலாளருக்கு கடிதம் அனுப்பியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இலை கட்சிக்கு மீண்டும் திரும்பியவர்களால் மாவட்ட செயலாளர்கள் திணறி வர்றாங்க ெதரியுமா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கிப்ட் கட்சிக்காரர் தனியா கட்சி ஆரம்பிச்சு ஆர்கே நகர் தொகுதில நிற்கும்போது வடசென்னையை சேர்ந்த நிர்வாகிகள் பலர் பணத்துக்கு ஆசைப்பட்டு பதவிக்கு ஆசைப்பட்டு அந்தப் பக்கம் போனாங்க. ஆனால் கொஞ்சம் கொஞ்சமா கிப்டுக்கு மவுசு குறைந்து விட்டதால் இலை கட்சிக்கே திரும்பி வர ஆரம்பிச்சாங்க. அப்படி வரும் எங்களுக்கு மீண்டும் பழைய பதவி வேணும், பொறுப்புகளும் தரணும்னு நச்சரிக்கிறாங்களாம். இதனால மாவட்ட செயலாளர்களும் அவங்களுக்கு அந்த பதவியை தருவதாக வாக்குறுதி அளித்தார்கள். ஆனால் ஏற்கனவே இருக்கிற கட்சி நிர்வாகிகளால் பெரும் தலைவலி ஆகிடுச்சு. கட்சி மாறிப்போன அவங்களுக்கு பதவி தர கூடாது என போர்க்கொடி தூக்கிட்டாங்க. இதனால் கொளத்தூர், வில்லிவாக்கம் ஆகிய தொகுதிகளில் பல கட்சி பதவிகள் காலியாயிருக்கு. இந்தப் பதவிக்கான நபர்களை தேர்வு செய்ய முடியாமல் மாவட்ட செயலாளர் தவியாய் தவிக்கிறாராம்.

மேலும் கிப்ட் கட்சியில் இருந்து வந்த பெண் ஒருத்தருக்கு கூட்டுறவு சங்கத்தில் பொறுப்பு வாங்கித் தந்ததால் இவர் மேல கட்சிக்காரங்க கடும் ஆத்திரத்தில் இருக்காங்க. கிப்ட் கட்சியிலிருந்து வந்த அந்தப் பெண் நிர்வாகி ஆர்கே நகர் தேர்தலில் ஒட்டு மொத்த இலை கட்சியையும் கடுமையாக எதிர்த்துப் பிரசாரம் பண்ணாங்களாம். அவங்களுக்கு இவ்ளோ முக்கியத்துவமானு மாவட்ட செயலாளர் மேல அவங்க கட்சி ஆட்களே கடும் கோபத்தில் இருக்காங்களாம். நேரம் கிடைக்கும்போது தலைமையிடம் புகார் கூறவும் தயாராக இருக்காங்கலாம் என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai

  கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

 • kurosiya

  கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

 • medition2020

  சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

 • in22222

  கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

 • india2020

  கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்