SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இன்சாட்

2020-02-12@ 18:01:53

நன்றி குங்குமம் முத்தாரம்

2045-ம் ஆண்டுக்குள் மனிதர்கள் டிஜிட்டல்  சாகாவரம் (Digital Immortality) பெற்றுவிடுவார்கள். மனிதர்களின் மனதை கம்ப்யூட் டருக்குள் பதிவேற்றுவதன் (Mind Uploading) மூலம் அது சாத்தியப்படும். 2013 ஜூன் 14 - 15 தேதிகளில் அமெரிக்காவில் நியூ யார்க்கில் நடைபெற்ற ‘உலக எதிர்காலம் 2045’ சர்வதேச மாநாட்டில் இதுவே விவாதப் பொருளாக இருந்தது. 1992ம் ஆண்டில் பிரேசிலின் ரியோடி ஜெனிரோவில் சுற்றுச்சூழல் குறித்த உலகக் கவலையின் வெளிப்பாடாக நடைபெற்ற மாநாடு ரியோ மாநாடு. இருபது வருடங்களுக்குப்பின் அதே நகரத்தில், அதே இடத்தில் 2012 ஜூன் 20 முதல் 22 வரை இம்மாநாடு நடைபெற்றது. இதற்கு ரியோ + 20 (RIO + 20) எனப் பெயரிடப்பட்டது. பசுமைப் பொருளாதாரம் பற்றி இம்மாநாடு விவாதித்தது.

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுவின் பெருஞ் சுரங்கமாகக் கருதப்படும் ஆர்க்டிக் பகுதிக்கான உரிமைப் பிரச்னை, பல நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்தி வருகிறது. ரஷ்யா, அமெரிக்கா, நார்வே, கனடா, டென்மார்க்  நாடுகள் வட துருவத்தில் பனி போர்த்திக்கிடக்கும் ஆர்க்டிக் பகுதிக்கு  உரிமை கொண்டாடிவருகின்றன. உலக வெப்பநிலையாக்கத்தால் 2030ல் இப்பகுதி பனி முழுதும் உருகிப்போகும்போது இங்கு உறைந்து கிடக்கும் பெட்ரோல் இருப்பைச் சுரண்டுவதே இவர்களின் திட்டம்.

இந்தியாவில் மிக உயர்ந்த பரிசுத்தொகை கொண்ட இலக்கியப் பரிசு, ஞான பீடம் மற்றும் சரஸ்வதி சம்மான். ஞானபீட விருது பெற்றவர்கள் சரஸ்வதி சம்மானுக்கும் சரஸ்வதி சம்மான் பெற்றவர்கள் ஞானபீடத்திற்கும் பரிசீலிக்கப்படுவதில்லை.இந்தியாவின் தேசியச் சின் னம், சாரநாத்தில் உள்ள அசோக ஸ்தூபியிலிருந்து எடுக்கப்பட்ட அசோகச் சக்கரமாகும். சாரநாத், உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி மாவட்டத்தில் உள் ளது. இது ரிஷி பட்டணம் என வழங்கப்பட்டிருந்தது. மிகப் பிரபலமான புத்தமத மையமான இங்குதான் புத்தர் தனது ‘தர்மச் சக்கர செயல்முறை’ என்னும் முதல் மாநாட்டை நடத்தினார்.

உலகின் மிக உயர்ந்த எவ ரெஸ்ட் சிகரத்தின் திபெத்திய பெயர் Chomolungma. சீனப்பெயர் Zhumulangma. நேபாள அரசு 1960களில் அதிகாரபூர்வமாக சூட்டிய பெயர் சாகர் மாதா.குதிரைப் பந்தயக்காரர் களுக்கு மிகப் பிரியமான ஒரு குதிரை இனமே, அகல்தெகி (Akhal - Teke). போர்களிலும் ஓட்டப் பந்தயங்களிலும் படு சாமர்த்தியமாகச் செயல்படும் இந்த தேன் நிறக் குதிரை இன்று உலகில் காணப்படும் மிகப்பழமையான குதிரை இனங்களில் ஒன்று. மாவீரன் அலெக்சாண்டரின் கம்பீரக் குதிரையான ‘பியூஸிபேலஸ்’, ஒரு அகல்ெதகி இனக் குதிரையே.

அந்தமானுக்கு 1858க்கும் 1860க்கும் இடையில் சுமார் 4000 கைதிகள் நாடு கடத்தப்பட்ட தாகத் தெரிகிறது. மிகவும் பெயர் பெற்ற ‘செல்லுலார் சிறை’
1896ல் கட்டப்பட்டது. கைதிகளே தொழிலாளர்களாகப் பணியாற்றினர். 1979ம் ஆண்டில் செல்லுலார் சிறை தேசிய நினைவுச் சின்னமாக்கப்பட்டது.தென் ஆப்ரிக்காவில் மொழி, இனம், மதம், கலாசாரம் ஆகியவற்றால் வேறுபட்ட இந்தியர் பலர் குடியேறியுள்ளனர். சுமார் 15 லட்சம் இந்தியர்கள் தென்னாப்பிரிக்காவைத் தாயகமாகக் கொண்டுள்ளனர்.இன்சாட் என்பதன் விரிவாக்கம் Indian National Satellite.

தொகுப்பு: க.ரவீந்திரன்


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 30-05-2020

  30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 29-05-2020

  29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 28-05-2020

  28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 26-05-2020

  26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 25-05-2020

  25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்