SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம் செய்யும் ZTE

2020-02-11@ 16:10:24

சீனாவை தளமாகக் கொண்டு இயங்கும் முன்னணி ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான ZTE ஆனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்நிலையில் ZTE Axon 10s Pro எனும் குறித்த கைப்பேசி தொடர்பான சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளன. இதன்படி 6.47 அங்குல அளவுடைய Full HD தொடுதிரையினைக் கொண்டுள்ள குறித்த கைப்பேசியில் Snapdragon 865 flagship processor உள்ளடக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பிரதான நினைவகமாக 6GB அல்லது 12GB RAM, 128GB அல்லது 256GB சேமிப்பு நினைவகம் என்பனவும் தரப்பட்டுள்ளன. மேலும் அன்ரோயிட் 10 இயங்குதளத்தில் செயற்படக்கூடிய குறித்த கைப்பேசியில் 20மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, 48 மெகாபிக்சல்கள், 20 மெகாபிக்சல்கள், 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெராக்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. எனினும் இதன் விலை தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 28-02-2020

    28-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • kalavaram2020

    டெல்லி கலவரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34ஆக உயர்வு: நேசித்தவர்களின் இழப்பை நினைத்து குடும்பங்கள் கதறல்

  • flight2020

    கொரோனா வைரஸ் பாதிப்பு: 18 டன் மருந்து பொருட்களுடன் இந்திய ராணுவ விமானம் சீனா சென்றது

  • keeladi20

    தோண்ட தோண்ட கீழடியில் அதிசயம்: 6-ம் கட்ட அகழாய்வில் முதுமக்கள் தாழி போன்ற அமைப்பு கண்டுபிடிப்பு

  • raajeshaathan20

    ராஜஸ்தானில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்து: 25 பேர் பலி...பலர் கவலைக்கிடம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்