SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மின்சாரக் கார்

2020-02-11@ 16:09:42

நன்றி குங்குமம் முத்தாரம்

சமீபத்தில் லாஸ்வேகாஸ் நகரில் பிரமாண்டமான கன்ஸ்யூமர் எலெக்ட்ரானிக்ஸ் ஷோ நடந்தது. இதில் நூற்றுக்கும் மேலான நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களின் தொழில்நுட்ப அப்டேட்டை காட்சிக்கு வைத்தன. ஜப்பானிய எலெக்ட்ரானிக்ஸ் ஜாம்பவானான ‘சோனி’ நிறுவனம் எதைக் காட்சிப்படுத்தப் போகிறது என்பதில் பலர் ஆர்வமாக இருந்தனர். அந்த ஆர்வத்தை இரட்டிப்பாக்கி ஆச்சர்யப்பட வைத்தது ‘சோனி’. ஆம்; ஒரு எலெக்ட்ரிக் காரை காட்சிப் படுத்தி அசத்தியிருக்கிறது ‘சோனி’. ‘விஷன் எஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் காரை ‘சோனி’யின் செயற்கை நுண்ணறிவுத் துறை மற்றும் ரோபாட்டிக்ஸ் துறை உருவாக்கியிருக்கிறது.

இதற்குமுன் இந்தத் துறைகளைச் சேர்ந்தவர்கள்தான் ‘அய்போ’ என்ற ரோபோ நாயை உருவாக்கி யிருந்தனர். தானும் ஆட்டோமொபைல் துறையில் குதிக்கப்போகிறேன் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறது சோனி. ஆனால், காரின் வடிவமைப்பு ஒரு பிரபல நிறுவனத்தின் காரைப் போல இருக்கிறது போன்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 28-02-2020

    28-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • kalavaram2020

    டெல்லி கலவரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34ஆக உயர்வு: நேசித்தவர்களின் இழப்பை நினைத்து குடும்பங்கள் கதறல்

  • flight2020

    கொரோனா வைரஸ் பாதிப்பு: 18 டன் மருந்து பொருட்களுடன் இந்திய ராணுவ விமானம் சீனா சென்றது

  • keeladi20

    தோண்ட தோண்ட கீழடியில் அதிசயம்: 6-ம் கட்ட அகழாய்வில் முதுமக்கள் தாழி போன்ற அமைப்பு கண்டுபிடிப்பு

  • raajeshaathan20

    ராஜஸ்தானில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்து: 25 பேர் பலி...பலர் கவலைக்கிடம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்