SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சூட்கேஸ் ரோபோ

2020-02-10@ 15:57:04

நன்றி குங்குமம் முத்தாரம்

ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் டெலிவரிக்காக  ரோபோவை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. சமீபத்தில் கூட அமேசான் நிறுவனம் டெலிவரி ரோபோவை சோதனையோட்டம் செய்தது. இப்படியிருக்க ரஷ்யாவின் இணைய வணிக தளமான ‘யான்டெக்ஸ்’ நிறுவனமும்  ‘யான்டெக்ஸ் ரோவர்’ என்ற பெயரில் ஒரு டெலிவரி ரோபோவை மாஸ்கோ நகரில் முன்னோட்டம் பார்த்திருக்கிறது. ஒரு சூட்கேஸ் போல வடிவமைக்கப்பட்டிருக்கிறது இந்த ரோபோ.

யாருடைய துணையும் இன்றி தன்னைத் தானே செலுத்தி, சாலைகளில் பயணித்து, யான்டெக்ஸ் வாடிக்கையாளரின் வீட்டு வாசலுக்கே பொருட்களை கொண்டுபோய் தந்துவிடுமாம். அதே நேரத்தில் எங்கு புறப்பட்டதோ அங்கேயே திரும்பியும் வந்துவிடும். சாலையில் போகும்போது எதன் மீதும் மோதாமல் செல்ல இதில் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. கூகுளின் தானியங்கி காரைப் போன்று இந்த ரோபோ செயல்படுகிறது. விரைவில் ரஷ்யாவின் வீதிகளில் யான்டெக்ஸ் ரோவரைப் பார்க்க முடியும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 28-02-2020

    28-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • kalavaram2020

    டெல்லி கலவரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34ஆக உயர்வு: நேசித்தவர்களின் இழப்பை நினைத்து குடும்பங்கள் கதறல்

  • flight2020

    கொரோனா வைரஸ் பாதிப்பு: 18 டன் மருந்து பொருட்களுடன் இந்திய ராணுவ விமானம் சீனா சென்றது

  • keeladi20

    தோண்ட தோண்ட கீழடியில் அதிசயம்: 6-ம் கட்ட அகழாய்வில் முதுமக்கள் தாழி போன்ற அமைப்பு கண்டுபிடிப்பு

  • raajeshaathan20

    ராஜஸ்தானில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்து: 25 பேர் பலி...பலர் கவலைக்கிடம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்