SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

1 டிபி ஸ்டோரேஜ் போன்

2020-02-03@ 16:39:18

நன்றி குங்குமம் முத்தாரம்

நவீன டெக்னாலஜி மற்றும் இன்றைய தலைமுறையைக் கவர்வதற்கான அம்சங்களை ஒன்று திரட்டி ‘கேலக்ஸி நோட் 10 லைட்’ என்ற புது மாடலை சந்தையில் இறக்கியிருக்கிறது ‘சாம்சங்’ நிறுவனம். ஒரு தாளில் பேனாவைக் கொண்டு என்னென்ன செய்ய முடியுமோ அதையெல்லாம் ஸ்மார்ட்
போனிலும் செய்ய ‘எஸ் பென்’ என்ற பேனா டிவைஸுடன் இந்த போன். தவிர, இந்த எஸ் பென்னைக் கொண்டு வீடியோ எடிட்டிங் கூட செய்யலாம். இந்தப் போனின் மற்ற அமசங்களையும் பார்ப்போம். மெகா சைஸில் மெல்லிய வடிவமைப்பில் அசத்துகிறது நோட் 10 லைட்.

6.7 இன்ச்சில் சூப்பர் AMOLED edge-to-edge Infinity-O  டிஸ்பிளே மற்றும் ஃபுல் ஹெச்.டி ரெசல்யூசன், 6 ஜிபி மற்றும் 8 ஜிபியில் இரண்டு வகையான ரேம்கள், வைடு லென்ஸ் பொருத்தப்பட்ட 12 எம்பி கேமரா, டூயல் பிக்ஸல் டெக்னாலஜி மற்றும் வைடு ஆங்கிள் லென்ஸுடன் 12 எம்பியில் இன்னொரு கேமரா, 12 எம்பியில் டெலிபோட்டோ லென்ஸுடன் கூடிய கேமரா என மூன்று பின்புற கேமராக்கள், செல்ஃபிக்குத் தனியாக 32 எம்பியில் ஒரு கேமரா, 4500 mAh பேட்டரி திறன் கொண்ட சூப்பர் ஃபாஸ்டிங் சார்ஜ், 128ஜிபி ஸ்டோரேஜ், 1 டிபி வரை ஸ்டோரேஜை நீட்டித்துக்கொள்ளும் வசதி என கெத்து காட்டுகிறது இந்த போன். பிப்ரவரியின் முதல் வாரத்திலிருந்து ஆன்லைன் மற்றும் மொபைல் ஷோரூம்களில் கிடைக்கும்.  விலை ரூ.38,999-லிருந்து ஆரம்பிக்கிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 28-02-2020

    28-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • kalavaram2020

    டெல்லி கலவரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34ஆக உயர்வு: நேசித்தவர்களின் இழப்பை நினைத்து குடும்பங்கள் கதறல்

  • flight2020

    கொரோனா வைரஸ் பாதிப்பு: 18 டன் மருந்து பொருட்களுடன் இந்திய ராணுவ விமானம் சீனா சென்றது

  • keeladi20

    தோண்ட தோண்ட கீழடியில் அதிசயம்: 6-ம் கட்ட அகழாய்வில் முதுமக்கள் தாழி போன்ற அமைப்பு கண்டுபிடிப்பு

  • raajeshaathan20

    ராஜஸ்தானில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்து: 25 பேர் பலி...பலர் கவலைக்கிடம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்