SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கு 16 பேர் மீது பிப்.1ல் தீர்ப்பு

2020-01-29@ 00:16:25

சென்னை: அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கில் 16 பேர் மீது வரும் பிப்ரவரி 1ம் தேதி சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 11 வயது சிறுமியை அதே குடியிருப்பில் வேலை செய்து வந்த வாட்டர்மேன், லிப்ட் ஆபரேட்டர், வாட்ச்மேன் உள்ளிட்டோர் பல மாதங்களாக பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, அயனாவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கடந்த 2018ம் ஆண்டு ஜூலை மாதம் போக்சோ சட்டத்தின் கீழ் 17 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, போலீசார் 17 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதனையடுத்து குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. அப்போது அனைவரும் தாங்கள் குற்றமற்றவர்கள் என்றும், தங்களுக்கு எதுவும் தெரியாது என்று மறுப்பு தெரிவித்தனர். பின்னர் சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்தவும் ஒப்புக்கொண்டனர். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

அதனைதொடர்ந்து அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞராக ரமேஷ், குற்றம் சாட்டப்பட்டவர்களின் சார்பில் ஆஜரான வக்கீல்கள் என அனைவரும் சாட்சிகளிடம் விசாரணையை கடந்த ஜனவரி மாதம் தொடங்கினர். அதில், அரசு தரப்பு சாட்சியாக 36 சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. 120 ஆவணங்களும் சமர்பிக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை கடந்த ஜனவரி-டிசம்பர் வரை 11 மாதங்களாக நடந்து வந்தது. இந்தநிலையில், வழக்கில் குற்றச்சாட்டு பதிவு, சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை, இருதரப்பு வாதங்கள் என அனைத்தும் முடிவடைந்த நிலையில் வரும் பிப்ரவரி 1ம் தேதி, போக்சோ சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி மஞ்சுளா தீர்ப்பு வழங்கயுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கின் விசாரணையின் போது உடல்நல குறைவு காரணமாக ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்