SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமெரிக்காவின் தலைசிறந்த கூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட் உயிரிழப்பு: அதிபர் டிரம்ப், ஒபாமா உள்ளிட்ட பல பிரபலங்கள் இரங்கல்

2020-01-27@ 09:33:05

லாஸ்ஏஞ்சல்ஸ்: உலகப்புகழ் பெற்ற அமெரிக்க கூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட் உயிரிழப்புக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் தலைசிறந்த கூடைப்பந்து வீரரும், 5 முறை என்.பி.ஏ.,  சாம்பியனுமான கோப் பிரயன்ட் ஒரு போட்டியில் விளையாடி முடித்தபின் வீட்டிற்கு மகளுடன் ஹெலிகாப்டரில் திரும்பி கொண்டிருந்தார். இந்நிலையில், தனியார் ஹெலிகாப்டரில் பயணித்த போது, தீப்பிடித்தது. தீயை அணைக்க அவசரகால  படையினர் முற்பட்டனர்.

ஆனால் யாரையும் காப்பாற்ற முடியவில்லை. இந்த விபத்தில் அமெரிக்க கூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட் (41) மற்றும் தனது 13 வயது மகள் கியானா உள்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். உலகெங்கிலும் உள்ள கோப் பிரயன்ட் ரசிகர்கள் அவரது  உயிரிழந்த செய்தி அறிந்து மிகவும் வெதனை அடைந்துள்ளனர். கோப் மரணத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப், முன்னாள் அதிபர் ஒபாமா உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்கள் இரங்கல்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் இரங்கல்:

தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், கோபி பிரையன்ட், எல்லா காலத்திலும் உண்மையிலேயே சிறந்த கூடைப்பந்தாட்ட வீரர்களில் ஒருவராக இருந்தபோதிலும், வாழ்க்கையில்  தொடங்குவதாக இருந்தது. அவர் தனது குடும்பத்தை மிகவும் நேசித்தார், மேலும் எதிர்காலத்தில் அத்தகைய வலுவான ஆர்வத்தை கொண்டிருந்தார். அவரது அழகான மகள் கியானாவின் இழப்பு, இந்த தருணத்தை இன்னும்  அழிவுகரமாக்குகிறது. கடவுள் உங்கள் அனைவருடனும் இருக்கட்டும் என்று பதிவிட்டுள்ளார்.

முன்னாள் அதிபர் அமெரிக்க ஒபாமா இரங்கல்:

கோப் பிரயன்ட், நீதிமன்றத்தில் ஒரு புராணக்கதை மற்றும் இரண்டாவது செயலைப் போலவே அர்த்தமுள்ளதாக இருக்கும். கியானாவை இழப்பது பெற்றோர்களாகிய நமக்கு இன்னும் மனதைக் உலுக்குகிறது. மிச்செலும், நானும் வனேசா மற்றும்  பிரையன்ட் குடும்பத்தினருக்கும் நினைத்துப் பார்க்க முடியாத நாளில் அன்பையும் பிரார்த்தனையையும் அனுப்புகிறோம் என்று பதிவிட்டுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai

  கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

 • kurosiya

  கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

 • medition2020

  சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

 • in22222

  கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

 • india2020

  கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்