SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முன்னாள் தலைமை செயலாளர் டி.வி.அந்தோணி காலமானார்

2020-01-26@ 02:15:07

சென்னை: தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் டி.வி.அந்தோணி (86). இவர், 1956ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெற்ற பிறகு, மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர் மாவட்டங்களில் கலெக்டராக பணியாற்றியுள்ளார். 1973ம் ஆண்டில் சென்னை மாநகராட்சியின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். 1981 மற்றும் 1985 ஆகிய ஆண்டுகளில் தமிழக தலைமை செயலாளராக இருந்தார்.  1991ம் ஆண்டு ஓய்வுபெற்ற பின் மாநில திட்ட கமிஷனின் தலைவராகவும் பணியாற்றினார். அவர் பணியில் இருந்த சமயத்தில் குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை திறன்பட செயல்படுத்தினார். பத்மபூஷண் விருதும் பெற்றுள்ளார். ஓய்வுக்கு பிறகு சென்னையில் வசித்து வந்த டி.வி.அந்தோணி நேற்று முன்தினம் காலமானார். டி.வி.அந்தோணியின் இறுதிச்சடங்கு சென்னை அடையாறு புனித லூயி தேவாலயத்தில் நாளை நடக்கிறது.

மு.க.ஸ்டாலின் இரங்கல்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘‘டி.வி.அந்தோணி மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணா முதல்வராக பொறுப்பேற்றிருந்த காலகட்டத்தில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவராகவும்,  கலைஞர் முதல்வராக இருந்த நேரத்தில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சி தலைவராகவும் பணியாற்றி- பல்வேறு ஊரக வளர்ச்சிப் பணிகளுக்கு முன்னோடியாக விளங்கியவர். தமிழகத்தின் முன்னேற்றத்திற்குப் பாடுபட்ட ஒரு அனுபவமிக்க, நேர்மையான, திறமையான அதிகாரியின் மறைவு தமிழகத்திற்கு பேரிழப்பு’ என கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-02-2020

    23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • theepam2020

    மகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்

  • 22-02-2020

    22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • UkraineCoronaProtest

    கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்!

  • puthu2020

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்